Tuesday, December 30, 2014

இன்னும் மிச்சமிருக்கிறது வாழ்க்கை உயிர்ப்புடன்

இன்னும் மிச்சமிருக்கிறது  வாழ்க்கை உயிர்ப்புடன் .[ புது  வருட  வாழ்த்தும் , கருத்தும் ]

செல்லும்  பயணம்தான்  இலக்கை  விட முக்கியம்  என்று  உணர்ந்து  இருக்கிறேன்  பலமுறை . எங்கேயோ  படித்த  வரிதான்  அது  என்றாலும்
வாழ்க்கை  அதனை  அசைபோட வாய்த்த  தருணங்கள்  பல.
என் நண்பனும்  நானும்  10 வருடங்களுக்கு முன்பு  பாண்டிச்சேரி  சென்ற  பொழுது  , ஆரோவில்  சென்றோம் , வரும்  பொழுது  பஸ்  கிடைக்காமல்  ,மாட்டு  வண்டியில்  லிப்ட்  கேட்டு  வந்து  , மெயின்  ரோடு  வந்து  சேர்ந்தோம் .இப்பொழுது  எனக்கு  ஆரோவில்  பார்த்ததைக்  காட்டிலும்  அந்த
மாட்டு  வண்டியில்  நாங்கள்  சிரித்த சிரிப்பும்  குதூகலமும்  தான்  நினைவில்  உள்ளது . ஆரோவில்  எங்கள்  அப்போதைய அன்றைய  பயணத்தின்   இலக்கு  ,மாட்டு  வண்டிப்  பயணம் தான் அதனை அடையும்  அனுபவிக்க  வேண்டிய  வாழ்க்கைப் பயணம்  என  எனக்கே நான்  சொல்லிக்கொள்வதுண்டு .
உண்மைதானே .

எங்கே  செல்லும்  இந்தப்  பாதை  என்று இளையராஜாவின்   குரலில்  வரும்  வரிகள்  எழுப்பும்  கேள்விகள்  பெரியது .
எல்லோருக்கும்  அவர் அவர் தளத்தில்  இந்தக்  கேள்வி  வாழ்வில்  வந்துச்  சென்றுதான்  இருக்கும் .வாழ்க்கையைச்  சார்ந்த  இப்படிப்பட்ட  கேள்விகளுக்கு  இடையே  தான்  வாழ்க்கைப் படகு  மிதந்து போய்க்கொண்டு  இருக்கிறது . இது  ஏன்  இப்படி  எனக்கு  மட்டும்  நடக்கிறது என்றக்  கேள்வி  யாருக்கும்   வராமல்  இல்லை. உண்மை  அதுவல்லவே  ,

ஒரு  சிறிய   சம்பவம்  அல்லது  சம்பவக்  கோர்வைதனை பார்ப்போம் .
2009  இல்  ஒரு  கம்பெனியில்  நேர்முகத் தேர்வு  நடந்த  பொழுது  , கடினமான  எதிர்பாரா கேள்வி கேட்டு  பிரித்து  எடுத்தார்கள் . இன்னும்  சிலரை  பார்த்துவிட்டு  பதில்  சொல்கிறோம்  என்று  சொல்லி  இருந்ததால் , நம்பிக்கை  விட்டுப்  போகவில்லை.நல்ல கம்பெனி , வீட்டின் அருகில்  என்பதால்  எதிர்பார்ப்பு  அதிகமாகவே  இருந்தது .  மூன்று  வாரம் கழித்து எனக்கு  தகவல்  சொன்னார்கள். தற்பொழுது  " hiring  freeze " அதாவது  ஆட்களை எடுக்கும்  சூழல்  நிறுத்தப்  பட்டுள்ளது  என்றும்  , பின்பு  மறுபரிசீலனை செய்வோம்  என்று  சொல்லிவிட்டார்கள் . வருத்தம்  தான் .  சப்புக்  கொட்டுகிறார்கள்  என்றுதான்  நினைத்தேன்.
பின்பு  பல  மாதங்கள்  கழித்து  நாங்கள்  உங்கள்  அனுபவத்திற்கு  ஏற்ற  வேலை  வைத்து  உள்ளோம்  , வருகிறீர்களா  என்று திரும்ப  வந்தார்கள்  . அதற்குள்  நான்  வேலை  பார்த்த  கம்பெனியில்  , வெளிநாட்டில்  ப்ராஜெக்ட்  வந்துள்ளது  என்றார்கள்   ,நான்கு  வருடங்களாக   குறைந்த  சம்பளத்திற்கு  வேலை  பார்த்ததின் பலன்  கடைசியாக  வரவும்  , அதனை  எடுத்துக்  கொண்டேன் .பின்பு  பல  முறை  எதற்கு அந்தக்  கம்பெனியில்  அப்படி  ஒரு  நேர்முகத்  தேர்வு  , எதிர்பார்ப்புகள்  , பின்பு  நானே  அதனை  வேண்டாம்  என்கின்ற  முடிவை  எடுக்கும்  சூழல் வாழ்கை  எனக்கு  அமைத்து   என  யோசித்தேன் .

பின்பு வெளிநாடு  வந்த  ஒரு வருடத்திற்குள் எங்கள்  கம்பெனி  சூழ்நிலை  சரி இல்லாமல்  சென்று  , நாங்கள்  வேலை  பார்த்த கம்பெனியின்  வாடிக்கையாளர் [ client  ] ப்ராஜெக்ட்  இல்லையென்று  சொல்லவும்  , அந்தப் ப்ராஜெக்ட்டில்  இருந்த  ஏழு  பேரையும்  ஈவு  இறக்கம்  இன்றி  உடனே  தூக்கி  எரிய  முடிவு  செய்தனர் .
இந்தியாவில்  என்றால்  பரவாயில்லை .விசாவில்  இருப்பதால்  வேலை  இல்லாமல்  போனால்  இரண்டு  வாரத்திற்குள்  நாடு  திரும்ப  வேண்டும் ,
மார்க்கெட்  நிலைமையில்  வேலை  வேறு  கிடைக்க  வேண்டுமே.
கடைசி  நிமிடத்தில்  இன்னும்  மூன்று  மாதத்திற்கு  இன்னொரு ப்ராஜெக்ட்  இருக்கிறது  என்று  வேறு  ஒரு  ஊரிற்கு  சென்று  சில  மாதங்கள் குடும்பத்தை விட்டு  இருந்து  பொழப்பை  ஓட்டினேன் . அப்பொழுதே  முடிவு செய்தேன்  இனி  இந்தக்  கம்பெனி யில்  இருந்தால்  வேலைக்கு  ஆகாதென்று .

மார்க்கெட்  சுமாராக  இருந்ததால்  அழைப்பு  வருவதும்  கடினமாகவே  இருந்தது . வந்த  வாய்ப்பும் 8-10  ரௌண்டுகள்   வைத்து  , பல  வாரங்கள்  காத்து  கிடக்க  வேண்டி  இருந்தது, மற்றவர்களுடனும் பேசிக்கொண்டு இருந்தமையால்  . 3 மாதத்திற்குள்  வாங்கி  ஆகவேண்டும்  என்ற  அழுத்தம்  வேறு  இருந்தது . அப்பொழுது  ஒரு  நல்ல கம்பெனி யில்  நேர்முகத்  தேர்வு
 சென்று  இருந்தேன் . அப்பொழுதே  இரண்டு  முறை  என்னிடம் தொலைபேசியில் பேசிய  பிறகு  ,  கடைசி  கட்டமான  நேர்முகத் தேர்வில்  இருந்தேன் . 3-4  பேருடன் பேசியாகிற்று  காலைச்  சுற்றுகள்  முடித்தன  , மதிய  இடைவேளை வந்தது . சாப்பிடும்  பொழுதும்  தேர்வு   எடுத்தனர் . சாப்பாடு  எங்கே  இறங்கும்  , மனதில்  இவ்வளவு  தூரம் வந்தாயிற்று , இதனைக்  கடந்தால்  நல்ல இடத்தில்  சேருவோம்  என்றுதான்  மனதில்  ஓடிக்கொண்டு  இருந்தது .இன்னும்  நான்கு  பேர்  பேச  இருக்கிறார்கள்  என்று  சொன்னார்  அந்த மேலாளர் .

மதிய  நேரத்தில் நடந்த  நேர்முகத்  தேர்வுதான்  வாழ்கை  எனக்கு  சொல்லிகொடுத்த  மறக்க  முடியா  பாடம்.
2 வருடங்கள்  முன்பு  நான்  அட்டெண்ட்  செய்த  பெங்களூருவில்  சேராமல்  சென்ற  கம்பெனியில்  கேட்கப்பட்ட  மிகக் கடினமான  கேள்விகள்  எனக்கு  இரண்டு  வருடம்  கழித்து  வெவ்வேறு  ஆட்கள்  இங்கே  கேட்டார்கள் .
அந்த  நேரத்தில்  அதனை  நான்  யோசித்து  அந்த  அளவிற்கு சிறப்பாக  சொல்லி  இருப்பேனா  என்று  தெரியவில்லை .
முன்பு  கேட்கப்பட்டு  , முழுத்  திருப்தி  இல்லாததால்  பின்பு  தீவிரமாக  படித்ததன்  வெளிப்பாடே  அப்பொழுது  நான்  கொடுத்த  நெற்றிப் பொட்டில்  அடித்தார் போன்ற  பதில்கள் . வேலை  கிடைத்து  விடும்  என்று  அவர்கள்  சொல்லும் முன்பே  எனக்கேத்  தெரிந்து  விட்டது .

அதன்  பின்பு  வாழ்க்கை   போடும்  சிலப்  புதிர்களுக்கு  நான்  ரொம்ப  யோசிப்பது  இல்லை . ஏன்  சொல்கிறேனென்று    உங்களுக்கப் புரிந்திருக்குமே .வாழ்க்கை  இப்படி  நமக்கு  அந்த  சமயத்தில்  புரியாத  புதிர்களை  போட்டும்  பின்பு அவிழ்த்தும்  இருக்கத்தான்  செய்யும் .

இதைத்  தவிர, விடை  கொடுக்க  முடியாத  பெரியக்  கேள்விகள்  நிறைய  இருக்கவே  செய்கின்றன . அப்படியே  உடைந்து  போய்  உட்கார்ந்து  முடிவதில்லை தானே . ஓடிக்கொண்டே  தான்  இருக்கிறோம்  , இருக்க  வேண்டியும்  உள்ளது .சரி  ஓடித்தான்  ஆக வேண்டியுள்ளது  என்று  ஆகிவிட்ட  பொழுது  , சலிப்பு  இன்றி  அதனை  ஒரு  நல்ல பயணமாக  ஆக்கி கொள்ள  வழி  தேடுவோம் என்றுத்  தோன்றியது.

சென்று  அடையும்  இலக்கு  ஒரு  பக்கம்  இருக்கத்தான்  செய்யும்.
அதை  அடைய  அன்றாட  சின்னஞ்சிறிய  சந்தோஷங்களைத்  தொலைக்க  வேண்டாமே   வேலைப்பழுவினால் திருமணமான  முதல்  மூன்று  வருடத்தில்  பெங்களூரில் [வீட்டை விட்டு  வெளியூரில் ]  இருந்துக் கொண்டு , கூர்க் [ coorg ] போக  வேண்டும்  என்ற  திட்டம்  நிறைவேறவே  இல்லை. மனைவிக்கு லீவ்  கிடைக்கும்  பொழுது  எனக்கு  வேலை  இருக்கும்  , அல்லது  மேனேஜர்  அவர்  எப்பொழுது  வேலைப்பழு  குறைவாக  இருக்கிறதோ  அப்பொழுது  லீவ்  கொடுப்பார் .அது  எனக்கு  ஒத்து வராது. கொஞ்சம்  கட்டாயம்  லீவ்  வேண்டும் என்று திட்டவட்டமாக  கேட்க  மனமில்லை . தவறு  என்று  பிறகு  உணர்ந்தேன் . இது  கூட  சின்ன இழப்புதான் . அதைத்தான்  நான் சொல்ல  வருகிறேன் , சின்ன  சின்ன  அழகான  நிகழ்வுகளின்  கோர்வைதானே நிறைவான  வாழ்க்கை .

கழிந்த  பொழுது கழிந்ததுதான் . அம்மா  அப்பாவிடம்  அதிக  நேரம்  செலவிடமால்  சனி  ஞாயிறு  தான்  அவசர  அவசரமாக  வந்து  போவோம் .
என்னத்தை  கிழித்து  விட்டேன்  அப்படி  இருந்து  என்றுதான்  இப்பொழுது  தோன்றுகிறது.

அலுவலகத்தில்  வேலை  இருந்துக்  கொண்டேதான்  இருக்கிறது  , சனி  ஞாயிறு  பாராமல்  கூட . எப்படி  இன்னும்  வேகமாக  ஆக  வேலை  பார்த்து  , நேரத்தை  நிர்வகித்து  , பிடித்த விஷயங்களுக்காகவும்
உடல்  நலம்  பேணவும் , குடம்பத்துடன்  அளவளாவவும்  , வாழ்க்கையினை  சற்று கூர்ந்து  அனுபவிக்கவும்  வேண்டும்  என்று  2014 இல்  முடிவு செய்தேன் .
அதன்  ஒரு  வெளிப்பாடு  தான் இந்த  ப்ளாக்  எழுத்தும்  கூட .

உடம்பு  என்னும்  இயந்திரத்திற்கு  பைக் மற்றும்  கார்களுக்கு  கொடுக்கும்  நேரம்  கூட  நாம் கொடுப்பதில்லை . தொப்பையில்  ஆரம்பித்து  முதுகு  வலி  , நீரழிவு  , மூட்டு   வலி  இப்படி   எதாவது வரும்  பொழுதுதான்   இளைய  வயதில்  கல்லைத் தின்றாலும்  செமிக்கும்  உடம்பின்  அருமை  தெரிகிறது  பெரும்பாலோருக்கு .
இன்னும்  ஒன்றும்  கெட்டுப்  போகவில்லை . 45 நிமிடங்கள்  உடம்பிற்கும்  , மனதிற்கும்  குறைந்தது  ஒதுக்க  வேண்டும்  என்பது  என்`புது  வருடத்  திட்டம் .செய்து  விடவேண்டும்  என்கின்ற  திட்டத்துடன்  தான்  இருக்கின்றேன் .
ஒரு  மாதம்  பல்லைக்  கடித்து செய்தால்  , அதன்  பிறகு  அதற்கு  மனம்  ஏங்கத்  தொடங்கிவிடும் . சிலர்  அலுவலகத்திற்கு  சைக்கிளில்  வருகின்றனர் .வேலைக்கு  மத்தியில்  ஒரு  நடையினைப்  போடுகின்றனர்  சிலர்  , கண்களுக்கும்  மூளைக்கும்  ஒய்வு  கொடுத்து ரீசார்ஜ்  ஆக சிறந்த  வழி .
இதனையும்  செய்யலாம் முடிந்தால் .

எல்லாம்  சரி  , நேரம்  எங்கே  எல்லாவற்றிற்கும் .24 மணி  நேரம்தானே  உள்ளது  எல்லோருக்கும் . வேலைப்பழு  அதிகம்  இருக்கத்தான்  செய்கிறது .
2014 முதல்  ஆறு மாதங்கள் அப்படிதான்  சென்றது  , 12-14 மணி  நேரங்கள்
. ஏழு  நாட்களும்  , ஆறு  மாதத்திற்கு  , தூங்கி  சாப்பிட்டு மற்ற  சொந்த  வேலைகளைப் பார்க்க  நேரம்  இருந்தால்  போதும்  என்றிருந்தது .
ஒரு  கட்டத்தில்  இது  சரிப்படாது  , வேறு  இடம்  போக  வேண்டிதான்  என்று  நினைத்து  இருக்கையில் , இன்னும்  ஒரு  6 மாதம்  கழித்து  முடிவு  எடுப்போம்  என்று  தள்ளிபோட்டேன்  , அடுத்த  ஆறு  மாதங்கள்  ஒரு  அளவிற்கு  பரவாயில்லை  . சில மாதங்கள்  நன்றாகவே  இருந்தது .
ஆனால்   ஜனவரி  வரை  இப்படியே  போய்   இருந்தால்  , வேறு இடம்  மாற  வேண்டும்  என்றுதான்  முடிவில்  இருந்தேன் . இது  போன்று  சூழ்நிலைக்கு  ஏற்றவாறு  , வேலை  சார்ந்து  மறுபரிசீலனை செய்யவும்  வேண்டி  உள்ளது .
வேலை கிடைக்கவும்   வேண்டும்  என்பது  வேறு உள்ளது .  சூழ்நிலைக்கு  ஏற்ற  வாறு  வேறு  எப்படி  சமாளிக்க  என்று  யோசிப்பதற்கு  சொன்னேன் .

என் நண்பன்  ஒருவன்  இதேப் போல்  ஒரு ஒருவருடம்  சரியான விடுமுறை இன்றி  இரவு  பகலாக  வேலைப்  பார்த்து  , தன  மகனுடன்  சரியாக  நேரம்  செலவிட  முடியாமல்  போனதும்  , அவன்  தன்னிடம்  நெருக்கமின்றி இருப்பதை  உணர்ந்த  தருணத்தில்  தான்  ஆகட்டும்  பார்த்து  விடலாம்  என்று ஒரு  வெறியில்  வேலை  மாறியதைச்  சொன்னான் .
அதை  நான்  அடிக்கடி  அசைபோட்டுக்  கொண்டுதான்  இருக்கிறேன் .
வொர்க்  லைப்  பாலன்ஸ்[ work  life  balance ]  இல்லாமல்  போனால்  மிகவும்  சிக்கல்  தான் .

அதற்காக கம்பெனி  மாற்றிக்  கொண்டே  இருக்கவும்  முடியாது .
இதனை  சரி செய்ய  நேரத்தை  சற்று  இதை  விட  எப்படி  சரியாக  உபயோகப்  படுத்த  முடியுமா  என்று  சுயவிமர்சனம்  செய்து  , அதனைச்   சரி செய்தப் பின்னும்  இதுவே  தொடர்ந்தால்  வேலை மாற்றம்  பற்றி  யோசிக்கத்தான்  வேண்டியுள்ளது .

நேரத்தை  எப்படி  சேமிக்க!??
வேலைக்கு செல்வதில்    போக்குவரத்தில்  அதிக நேரம்  எடுத்துக்கொண்டால் ??[ அது  தானே  பெரிய  நேர  விழுங்கி! ] , வாடகை வீடாக இருந்தால்  அலுவலகம்  அருகில் வீட்டைப்  பார்த்து  நேரத்தை  சேமிக்கலாம் . இதைத்தான்  செய்தேன்  நான்  பெங்களூருவில் இருந்த  பொழுது.
இப்பொழுதும்  இங்கே.சொந்த வீடு  ரொம்ப தூரத்தில்  இருந்தால்  , முடிந்தால்  கம்பெனிதனை  மாற்றலாம் . வேலையினை  இன்னும்  வேகமாக  செய்ய  முனைவதும் ஒரு  வழி .

இன்னொரு வழியும்  உள்ளது .என்னுடைய நண்பர் ஒருவர்  காலை  6:30 , 7 க்கு  வீட்டில் இருந்து  கிளம்பி  விடுவார் .  காலையில்  30-45 நிமிடங்கள்  மிச்சம்   ஆகிறது  என்றுச்  சொல்வார் . பிள்ளைகளுடன்  நேரம்  செலவழிக்க  வசதியாக  இருக்கிறது  மாலையில்  என்பார் . சோம்பல்தான்  காரணம்  , இரவில் நீண்ட நேரம்  வேலை பார்த்து  பழகிய எனக்கு  , இது  கஷ்டமாக  இருக்கிறது .
[ மிகவும்  கெட்ட  பழக்கம்  என்று  தெரிந்தும்  செய்து  வருகிறேன் .மாற்றும்  முயற்சியில்  உள்ளேன் ]ஆனால்  முயன்றால் முடியாமல்  இருக்காது . வழிகள்  இருக்கத்தான் செய்கிறது  , கொஞ்சம்  நம்மை  வளைக்க  வேண்டும் .
முக்கியமாக  விடிகாலையில்  மூளை  சுறுசுறுப்பாக  இருப்பதால்  வேலை  தடையின்றி  வேகமாக  நடப்பதை  நானே  கவனித்துள்ளேன் .

குடும்பம்  , நண்பர்களுடன்  அதிக  நேரம்  செலவழிப்பதும்  , புத்தகம்  படிப்பதும் ,பயணம்  செய்வதும்  இப்படி  அவர் அவருக்கு பிடித்த  வேலைக்கு  நேரம்  ஒதுக்கியே  ஆக  வேண்டும் .இல்லையென்றால்  வேலை  பார்த்து  பார்த்து  வாழ்க்கை முடிந்து  விடும்  போல . இந்த  வருடம்  தொடங்கப்  போகிறது .
இது  நம்மைப்  சுயவிமர்சனம்  செய்துக்  கொள்ளும்  தருணம் . நம்மை  இன்னும்  மெருகேற்றி  நம்மையும்  , நம்மைச்  சுற்றியுள்ள  குடும்பமும்  சமுதாயமும்  இன்னும்  சிறப்பாக  இயங்க  நாம்  என்ன  செய்ய  முடியும்  என்பதனை பற்றி  யோசிப்போம் , செயல்முறைப்படுத்தவும்  செய்வோம் .
குறைந்த  பட்சம்  ஒரு  மரத்தை  நட்டு  அதனைப்  பேணுவோம் , இது  சுலபமாக  செய்யக்  கூடியது தான் .

சரி  ,இந்த  வருடத்திற்கான  சுய மற்றும்  வேலை  சார்ந்த  குறிக்கோள்கள்  [ personal  and  career  goals ] எனத்  தனித்தனியே  ஒரு  திட்டம்  வகுத்தாகி விட்டாயிற்று . ஜனவரி  10 வரைகூட  தாண்டுமா  இது  என்று  நீங்கள்  நினைப்பது  புரிகிறது .  இதற்கு  ஒரு  தீர்வு பார்ப்போம் .

பிரயன்  டிரேசியின்  [ BRYAN  TRACY ] , கோல்ஸ்  [ GOALS ] புத்தகத்தில்  இது  ஆகிவிடாமல்  இருக்க  ஒரு  வழி  சொல்கிறார் .
நம்முடைய  குறிக்கோள்கள்  [ கோல்ஸ்] எல்லாவற்றையும்  ஒரு  நோட்டு  போட்டு  எழுதி  வைத்திட  வேண்டும்  என்று  சொல்கிறார் . அதனை  தினமும்  இரவிலும்  , காலையில்  வேலை  தொடங்கும்  முன்பும்  பார்க்கச்  சொல்கிறார் . வாரத்திற்கு  ஒரு முறையும்  ,மாதத்திற்கு  ஒரு  முறையும்  நாம்  எங்கு  உள்ளோம்  என்று  மறுபரிசீலனை செய்து  அதற்கேற்றவாறு  நம்மைத்  திருத்திக்கொள்ள  வேண்டும்  என்கிறார் .
இதைக்காட்டிலும்  முக்கியமான  ஒன்று  இப்படிச்  செய்வதால்  , நம்  ஆழ்மனத்தில்  படிந்து  இது  நம்முடைய  கனவை  நோக்கி  இழுத்துச்  செல்லும்  என்கிறார் . செய்துப்  பார்க்கலாமே !


நம்  பிள்ளைகளுக்கு  ஏதேனும்  கற்பித்தால்  , அவை  வேறு  ஒரு  சமயத்தில்  அவர்கள்  நமக்கே  ஆசானாக  ஆனத்தருணங்களை  எல்லோரும் எப்போதாவது  ஒரு  முறை  உணர்ந்து  இருப்போம். இதுதானே  வாழ்க்கை !

அனைவருக்கும்  இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள் .



Friday, December 26, 2014

பிஞ்சிலே பழுக்க வைக்க வேண்டாமே !

பிஞ்சிலே  பழுக்க  வைக்க வேண்டாமே !

டல்லாசில்  இரண்டு வருடம்  முன்  , ஒரு  குழந்தைகள் பொம்மைக்கடையில் என்  நண்பர்  மகளுக்காக  சில  பொம்மைகள்  பார்த்துக்கொண்டு  இருந்தேன்.

" I KNOW YOU CAN AFFORD MUM, ITS ONLY 30 dollars " என்று ஒரு  குரல்  கேட்டது.
திரும்பிப்பார்த்தால்  , ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க  தங்க  நிறத்தில்  நெற்றி  வரை  முடியுடன்  [ முஷ்ரூம்  கட் !] செய்த  ஒரு  அமெரிக்க  சிறுவன்  இதைச்சொன்னான்  என்றுத்  தெரியவந்தது . அவன்  அம்மா  

" NO sweety, your budget is 20 dollars. You need to chose within the budget"
என்று  சொல்கிறார்கள் . அந்த  நோ  கொஞ்சம்  அழுத்தமாகவே  வந்தது .

  நாம்  எங்கு இருக்கிறோம்  , என்ன  நடக்கிறது இங்கே  என்று சரியாக  விளங்கிக்கொள்ள சற்று  நேரம்  பிடித்தது  எனக்கு . 
அந்தச்  சிறுவனின்  கேள்வி  ஏற்படுத்திய  ஷாக்  தான்  வேறு  என்ன .
எதையும் வாங்காமல்  அந்த  இரண்டாவது  மாடியிலுருந்து  எதையோ யோசித்தவாறே   , மறுபடியும்  அந்த  அம்மா  பையனை  ஒரு முறை பார்த்து  விட்டு  இறங்கி  வந்தேன்  தரைக்கு . நிஜமாகவே தரைக்கு  வர  இன்னும் கொஞ்சம்  நேரம்  ஆனது  வேற  விஷயம் .மனம்  அங்கேயேதான்  சுழன்றுக்கொண்டு இருந்து  பம்பரம்  போல் .

அந்த  வயதில்  டி  நகர்  , ரங்கநாதன்  தெருவில்  நடு  ரோட்டில்  உருண்டு  புரண்டு , லாலா  வேண்டும்  [ என்  அப்போதைய  மொழியில்  கார் ] என்று  அழுத  நாட்களை  அம்மா சொன்னதுண்டு . அந்தப்பிம்பம்  ஓடி  மறைந்தது  மனதில்  , எப்படி  இருந்து இருக்கும்  என்று .

இங்கே   விஷயத்திற்கு வருவோம்.
அவனுடைய  அம்மா  அவனுக்கு மிகவும்  இளம்   வயதிலயே  பொருளாதாரமும்  , பணத்தை  கையாளும்  விதத்தையும்  சொல்லிக்கொடுக்கிறார்கள்  என்பது எனக்கு  விளங்காமல்  இல்லை.
ஒரு  பொருளை  வாங்கித்தர முடியாமல் போனால்  கூட , அவனுக்கு  வீட்டின்  பொருளாதார  சூழ்நிலை  தெரிந்து  வளர  வேண்டும்  , ஒரு  அளவிற்கு   மேல்  ஆசைப்பட கூடாது போன்ற  விஷயங்களை   சொல்லித்தந்துக் கொண்டு  இருக்கிறார்  . நண்பர்களிடம்  வியப்புடன்  இதைபற்றி பேசியும்  விவாதமும்  செய்தேன்.  இவன்  நாளை குடும்ப  சூழ்நிலை  தெரிந்த , பணத்தை  எப்படி  கையாள  வேண்டும்  என்கிற  பக்குவம்  நிறைந்த  ஒரு  நல்ல இளைஞனாக  வருவான்  என்பதில்  மாற்றுக்கருத்து  இருக்க  முடியாது ..

அவன்  கேட்ட  கேள்வியின்  ஆழம்  வேற தளத்தில்  இருந்தது தான்  நான்  இதை அவ்வளவு  யோசிக்கக்  காரணம்.

" ஏன்  வாங்கித்தர  மாட்டேன்குற  அம்மா   ?" என்பது  வேற .

உன்னால்  வாங்கித்தர  பொருளாதாரத் தகுதி [ affordability ] இருந்தும் ஏன்  வாங்கித்தர  தெரியவில்லை  என்கின்ற  கேள்விதான்  என்னைக் கவலைப்படச் செய்தது .

ஆனால்  அவன்  வயதில்  என்னைப்   போல்  தரையில்ப்புரண்டு  அழுவதையே  ஒரு  அப்பாவாக  நான்  விரும்புவேன் .
அந்த  நேரம்  கோவம்  வரலாம் , ஆனால்  நாளை  இதைப்பற்றி  என்  அம்மா  என்னிடமும்  , என்  மனைவிடமும் , என் நண்பர்களிடமும்  சொல்லிச்  சிரித்திட  ஒரு  நிகழ்வு  இருக்காதே . இதைக்காட்டிலும்  அவன்  தன குழந்தைத்தனத்தை  இத்தனை  இளம்  வயதில்  ஏன்  இழக்க  வேண்டும் .

கேட்டதை  வாங்கிக்கொடுக்க  வேண்டும்  என்று சொல்லவரவில்லை.
கொஞ்சம்  தாச்சா  காண்பித்து , ஒரு  பலூனையோ  ,
ஒரு  சிறிய  பொம்மையினை காண்பித்து  , இது  superman   உபயோகித்த  கார்  போன்று  ஒன்றைச் சொல்லி அவனுக்கு  பிடித்த  ஒன்றில்  மனதை  திருப்பச் செய்து  , அல்லது  அந்த  இடத்தை  காலி செய்வது  தான்  எனக்கு  உச்சிதாமகப்  பட்டது.அவர்கள்  மனதை  மாற்ற  வேறு  வழி  இல்லாமலா  போகும் .

அந்த  அம்மா  செய்த  அணுகுமுறை  சிறந்தது  , எனக்கும்  அதில்  பாடம்  உண்டு , ஒரு  விதத்தில்  அதனை  நான்  பயன் படுத்திக்கொள்வேன்  , ஆனால்   3-4 வயதில்  அல்ல. இந்த  ஒரு  நிகழ்வு  மட்டும்  இல்லை  நான்  சொல்லவருவது , எல்லாவற்றையும்  சீக்கிரமே  கற்றுக்கொடுத்துவிட  வேண்டும்  என்று  நினைக்கும் அவசர  மனோநிலையினைத்தான்  நான்  யோசித்து  வந்தது..

சமீபத்தில்  பள்ளிகள்  போட்டு  படுத்தும்  பாட்டில்  ,தன்  இரண்டாவது  படிக்கும்  மகன்  சொன்னதாக  என்  நண்பர்  சொன்னது  , " அப்பா  நான்  நாம  ஏன் பா  பொறக்கணும் !?"  இதற்கு  மேல்  என்ன வேண்டும்  , அவர்கள்  மன  நிலைமையினை உள்ளே  சென்றுப்பார்க்க . அவன்  அம்மாவும்  கூடே  சேர்ந்து  அவனைப் போட்டு   அழுத்தி  எடுக்கிறாள்  , அதனால்  நான்  அவனை  கொஞ்சம்  சமநிலை  பிடிக்க  வெளியே கூட்டிப்போய் மறுபடியும்  சிறுவனாக்கினேன்  என்றுச்  சொன்னார் .

சின்ன  சின்ன  விஷயங்களில்  இருக்கும்  ஆனந்தத்தை  அனுபவிக்கட்டும் .
மழையில்  நனையட்டும் , கொஞ்சம்  குளிரும் வெயிலும் பார்கட்டும் ,
மண்ணில்  புரளட்டும்  ,  மற்ற  குழந்தைகளுடன்  டூ  சேக்கா  எல்லாம்  விட்டுப்  பின்பு  சேரட்டும் , பஞ்சு  மிட்டாய் வாயில்  ஒழுகத்  திரியட்டும் .பொருளாதாரம்  எல்லாம்  பேசி  அவர்களை  உங்களுக்கு  சமமாக  பேச  சிந்திக்க வைக்க  வேண்டாம்  அந்த  வயதில் . ஒருவேளை   அவர்களுக்கு  வாழ்கை  இவ்வளவு  சிக்கலானதா   என்கின்ற சலிப்பு  வந்து விட  வாய்ப்பு  இருக்கிறது .

வாழ்வின்  யதார்த்தமும் , சூழ்ச்சியும் , வெற்றியும்  ,தோல்வியும்  , மார்க்   , career  பற்றிய குழப்பங்கள்  இப்படி  எல்லாவற்றையும்  கடக்க  அவர்களுக்கு இன்னும்  காலம்  இருக்கிறது ..  பிஞ்சில்  பழுத்து  விட்டார்கள்  என்று  சொல்லும்  காலம்  போய் , விதை  துளிர்த்து  மண்ணை  எட்டிப்பார்த்து  வெளியே  வரும்  பொழுதே  பழுக்க  வைக்க  வேண்டாமே!
இதைச்  சொல்ல  நான்  ஒன்றும்   பெரிய  குழந்தைகள்  மன  நிலை படித்த  அப்பா  டக்கர்  இல்லை. ஒரு  அப்பாவாக  சொல்கிறேன்  அவ்வளவுதான் . அந்த  வயதைக்  கடந்து  வந்தவர்கள்   தானே  எல்லா  அப்பாக்களும் .

கொய்யாக்களை   " ethylene " போட்டு சீக்கிரமாகவே  பழமாக்கிட  வியாபாரிகள்  இருக்கின்றனர்  , குழந்தைகள்  பழங்கள்  அல்லவே  , பூக்கள்  ஆயிற்றே , மலரும்  போது   மலர்வர்  , தண்ணீர்  ஊற்றுவோம்  , அனால்  இதழ்களை  போட்டு  விரித்து  எடுக்கவேண்டாம்  என்று  சொல்கிறேன் .


கூலாக [MR cool ] இருப்பது எப்படி ..??

கூலாக  இருப்பது  எப்படி ..??

"He is a cool dude"

இதை  நாம்  வாழ்க்கையில்  சில முறையேனும்  கேட்டு இருப்போம் ...
சிவாஜி  படத்தில்  கூட ரஜினி  இதனைப்  பிரயயோகப்படுத்தி  இன்னும்  பிரசித்தமானது  நினைவிருக்கும் .

இந்தத்தலைமுறை   யுவதிகளிக்கு  இப்படிப்பட்ட  கூல்  "dude" களைத்தான்   பிடிக்கும்  போல .

சரி கூல்  என்றால்  என்ன .ஆங்கிலத்தில்  " being  cold " என்று  சொல்வோமே  , அதில் இருந்துத்தான்  வந்ததோ .அதாவது  , ஒரு உணர்ச்சி இன்றி  , மறக்கட்டைத்தனமாக  நடந்துக்கொள்ளுதல் கொள்ளுதல்  எனலாம் .

ஆனால்  நாம்  பேசும்  இந்த   கூல்னஸ் இதிலிருந்து  கொஞ்சம் வேறுபட்டது  அதற்கும்  பெரிதாக  அலட்டிக்கொள்ளாமல் ,
விளைவுகளைப்பற்றி  கவலை இன்றி  இருப்பது  எனச்சொல்லலாம் .
அப்போ  இது மரகட்டைத்தனம்   தானே  என்று  கேட்பது  புரிகிறது.அதாவது  எப்படி சொல்லுவது  ,...மரக்கட்டைத்தனம்   மாதிரி தெரியும் ஆனால்  முழுவதும் இல்லை....இதில்  ஒரு  குறும்புத்தனம்  கூட  இருக்கும்.

இந்தக்  கூல்னஸ்   தான் தெலுங்கு  நடிகர்  பவன் கல்யாண்  ஹிட்  ஆகக்காரணம் . கூல் என்றதும்   எனக்கு  சட்டுன்னு  அந்த  நடிகர்  தான்  நியாபகம்  வருகிறார் .
தமிழில்  , போக்கிரி  விஜய் கதாபாத்திரம் இதைத்தான்  செய்யும் [ தெலுங்கில்  மகேஷ்  பாபு ]செய்யாமல்  செய்யணும்   , செஞ்சா  அதில்  கூல்னஸ்   போய்விடும் .கொஞ்சம்  கிட்ட  வந்துட்டேன்னு  நினைக்கறேன் .

   கூல்னஸ்    பல  விதமான  செயல்களின்  வெளிப்பாடு .சம்பாஷனை  [ dialogues ] , உடல்  மொழி  [ body  language ]  , மற்றும்  ஒரு  பேச்சுக்கோ நிகழ்விற்கோ  இயல்பாக   கொடுக்கப்படும்  எதிர் பேச்சோ  அல்லது  எதிர்  வினையோ [ reacting  ] சற்றே  குறைந்து  அல்லது  ரொம்பவே  குறைந்து  , ஏதோ  காது  குடைந்துக்கொண்டே  பேசுவது  போல  பேசுவதோ  , நடந்துக்  கொள்வதோ கூல்னஸ்   எனச்சொல்லலாம்  . உங்களுக்கே  இது  புரியும்  , தெரியும் , சரி  ஒரு  முன்னுரை  கொடுத்தாதானே சரிப்படும் .

இதை சிலருக்கு  பிறவியிலேயே வந்து  விடுகிறது. இது  தான்
born  cool "  வகை . இவர்கள் தான்  அல்வாவில்  திருநெல்வேலி  இருட்டுக்கடை  அல்வா  , தூத்துக்குடி  மக்கரோனி  , விருதுநகர் ரயில்வே  ஸ்டேஷன்  மசால்  வடை  , கோவில்பட்டி   கடலை  மிட்டாய்  , மற்றும்  பரங்கிப்பேட்டை  அல்வா
அல்லது  எங்கள்  கோவை  GCT  அருகில்  கிடைக்கும் தெருவோரக்கடை  வீச்சு பரோட்டா வகை .[நான் மிகவும்  ரசித்த  சிலதைத்தானே சொல்ல  முடியும் ]

எதற்கும்  சட்டை செய்ய  மாட்டார்கள் .
என்  நண்பன்  ஒருவன்   இந்த வகைதான் . கம்பெனி  யில்  layoff ,  குழந்தை வளர்ப்பு  , வருங்கால  சேமிப்பு , IT  துறையில்  45  வயது  வரையிலாவது  வேலையினைக்  காப்பற்றிக்கொள்ளவேண்டும்  என்ற  கவலை  , பெங்களூர்  டிராபிக்  , இப்படி  எந்தத்  தலைப்பை  பேசினாலும் , பெரிதாக  அலட்டி கொள்ளமாட்டான் . பார்த்துக்கலாம்  என்ற  பதில் வரும்  , அது  கூட  பரவாயில்லை ," க்கு க்கு க்கு" என்ற  ஒரு  சிரிப்பு ஒன்றை சிரிப்பான் .அதை  நான்  எப்படி  ப்ளாகில்  விவரிக்க.கிட்டத்தட்ட  வில்லன்  கோட்டா  சீனிவாச  ராவின்  சிரிப்பைப்போன்றுதான்  இருக்கும்  அவனது சிரிப்பு .
நல்ல  கம்பெனியில்  வேலை  பார்த்துக்கொண்டு  இருப்பான் . திடீர்னு  ஒரு  நாள்  பேப்பர்  போட்டுடுவான் [ அதான்  resignation ]  தாவிக்கொண்டே  இருப்பான்  2 வருடங்களுக்கொரு  முறை  . சில  சமையம்  ஆபீஸ்  கான்டீன்ல இட்லி  சூடா  இல்லைன்னு  கூட .ஒரு  பேச்சுக்கு  சொன்னேன்.
டேய்   ரொம்பத்தாவதடா   , நாளைக்கு  பிரெச்சனை  வரும்  என்று  சொன்னால் , அதற்கும்  அதே  சிரிப்புதான் . காற்றுள்ள  வரை  தூற்றிக்கொள்  வோம்  என்று  தத்துவம்  வேற  சொல்லி  கடுப்படிப்பான் .கம்பெனி  வருடாந்திர  அப்ரைசல்  பற்றி  அலட்டிக்கொள்ளும்  எல்லோரும்  இவனிடம்  தான்  பாடம்  எடுக்க  வேண்டும் .இவனுக்கு  என்ன   ரேடிங்  கொடுத்தார்கள்  என்றெல்லாம்  எனக்குத்தெரியாது  , நல்ல  வேலை  பார்ப்பான்  என்று  தெரியும்  , அனால்
என்னக்கொடுத்தாலும்  கவலைப்பட  மாட்டான் .
எல்லாத்துக்கும்  ஒரே  பதில்தான் . " பிடிக்கலைன்னா  பேப்பர்  போட்டுடுவோம் , க்கு  க்கு க்கு ".

இதைத்தவிர  ஒரு  வரியினை  நான்  இது வரை  தணிக்கை  செய்தே  போட்டு  வருகிறேன் . அதையும்  உடைத்து விடுவோம் ,

" பிடிக்கலைன்னா  பேப்பர்  போட்டுடுவோம்..இருக்கவே  இருக்கு  என்னக்கு  டைரக்டர்  கனவு ,,,,க்கு  க்கு  க்கு "


IT  துறையில்  பெரிய கம்பெனி  ஒன்றில் கடந்த  சில  வருடங்கலாத்தான்  paper  போடாமல்  இருந்து  வந்தான்  . சென்னையில்  நம்ம  அண்ணாச்சி  கம்பெனியில்   முன்பு  ஒரு முறை  இருந்தான் . திடீர்னு  ஒரு  நாள்  , நம்ம  ஒளி  ஓவியர்  தங்கர்  சாரின்  வீட்டிற்கு  போய்  வந்தேன்னு  போன்  செய்தான் .
என்னடான்னு  கேட்டா , " அழகி  படம்  பார்த்து   மெரிசலாயிட்டேன்   .....சரியாய்  தூக்கம்  வர  மாட்டேன்கிறது. என்ன  வேலை  பார்த்துக்கிட்டு  இருக்கிறோம் .வாழ்ந்தா  இது  போல  ஒரு  படம் எடுத்தாகணும்   ..அதான் தங்கர்  சாரட்ட  அச்சிச்டன்ட்  ஆகா  சேர கேக்கப்போய்  இருந்தேன்னு  சொன்னான் .

இந்தத்தொழில்  எல்லாம்  சரிப்பட்டு  வராது  , நீங்க நல்ல  நிலையில்  இருக்கீங்க , பொழப்பை  பாருங்கன்னு  சொல்லியனுப்பியதாகச் சொன்னான் .

நம்ம  சுத்தி  நிறைய  கதை  இருக்கு   , எடுக்கலாம்னு  சொன்னனான் .
கலை  உலகத்திற்கு நாளை கிடைத்து  இருக்கவேண்டிய  பொக்கிஷம்  ஒன்றை  இழந்து விட்டோம் நாம் . பையனிடம்  கை வசம்  சில  ஸ்க்ரிப்டுகள்  உண்டு .  கத்தி  படம்  பிறகு , ரொம்ப உஷாராக  கதையினை    "copy  rights " வாங்கிய  பிறகு  வெளியே  சொல்லப்போவதாக  சொன்னான் .ரொம்பத்தெளிவு  .


இது  இப்படி  இருக்க  , அவனுக்கு  திருமண  சமயத்தில்  பெண்  பார்க்கும்  சமயத்தில்  ஒரு முறை  பேசும் பொழுது  ,   ஜாதகம்  எல்லாம்   பொருந்தி  , பெண்  பிடித்துப்போய்  , ஒரு  பெண்ணை  நேரில் பார்த்து பேசி  வந்ததாகச்சொன்னான்  . டேய் , உன்  சினிமா  ப்ளான்ஸ்  எல்லாம்  சொல்லி  பொண்ணைத்  terror  ஆக்கிடாதடா   futurela என்று  சொல்லி  முடிப்பதற்குள் , அதேப்படி  சொல்லாமல்  இருப்பேன், நாளைய  ப்ளான்ஸ்  பத்தி  சொல்லியாகணும்ல  , அப்புறம்   ஏமாத்தி
பண்ணிவச்சுட்டாங்கல்லன்னு  சொல்லிட்டா ? வென்று   சொல்லி   , அவனுடைய க்கு  க்கு  க்கு  உடன்  முடித்தான் . சரிதான்  போ ன்னு  நினைக்கையில்  , சில  மாதங்களுக்கு  பிறகு  , அவன்  கல்யாண  சாப்பாடும்  சாப்பிட்டு  வந்தேன் .யார் அந்த  புண்ணியவதி  என்று  பார்க்கும்  ஆவல்  தான்  தூக்கலாக  இருந்தது  . அதன்  பிறகு  இது  வரை  வேறு  எந்த  டைரக்டர் இடமும்  சென்று  சேரவில்லை .

" இனிமேல  அசிச்டன்ட்  டைரக்டர்  எல்லாம்  வேணாம் . straightaa  டைரக்டர்  தான் . கெளதம்  மேனன்  போல engineering  படிச்ச  டைரக்டர் . ஸ்கிரிப்ட்  தான்  மெயின் , assistant  directors  வச்சு  ஒரு  படத்துல  மத்ததை  பாத்துக்கறேன் " என்று  சில மாதங்களுக்கு  முன்பு  பேசிய  போது   சொன்னான் .

எப்ப  சொன்னான்னு  சொல்லலையே , "வேலை  மாத்தி  சென்னை  வந்துட்டேன்  திரும்ப . ஆபீஸ்  போய்  வர  4 மணி  நேரம்  ஆகுது  , அதான்  O  M  R  ல   இருக்கிற  ஆபீஸ்க்கு   வர  முடியலை  , முதுகு   வலி  வேற , அதான் வேற  ப்ரொஜெக்ட்ல போட  சொல்லி  இருக்கேன் , சரி  அப்போ  சம்பளம்  கிடையாது  ன்னு  சொன்னங்க . தட்ஸ்  ok  .....நமக்கு  என்ன  housing  loan  ஆ  என்ன ?  க்கு க்கு க்கு " என்றான் .


சும்மா  வெளில  கூல்  dude  என்று  சீன்  போட்டு  விட்டு  , தனக்குன்னு  வந்தா , ஐயோ  யம்மான்னு  ஊரைக்கூட்டும்  பார்ட்டிகளையும்  நான்  பார்த்து  உள்ளேன் .நீங்களும்  பார்த்து  இருப்பீர்கள் .

நம்ப தோஸ்து எப்படி !

இந்தக்காலத்துல  பொழைப்ப  ஓட்ட  , BP  இல்லாமல்  இருக்க  இவனிடம்  இருந்து  தான்  பாடம்  பயில  வேண்டும் .

பக்கத்துல  பாம்  வெடிச்சா  கூட , அசால்ட்டா   ஒரு  எட்டு  எட்டிப்பாத்துட்டு  , தட்டிட்டு  போற  பார்டி .

போன  முறை  அவனுடைய  அம்மாவைப்பார்த்த  பொழுது  கூட  , என்னமோ  உளறிகிட்டு இருக்கான்பா , சீரியசாவே   இருக்கமாட்டேன்றான்  என்று  ஆதங்கப்பட்டார்கள் . நானும்  என்  நண்பனை  குறை  சொல்லாதீர்கள் என்று  சொல்லிவந்தேன்  ,சிரித்தவாறே  .

பொல்லாதவன்  படத்தில்  வரும்  தனுஷ்  போல  , "அவனை எல்லாம்  அப்படியே  விட்டுடணும்  "  .

jokes  apart  ,என்னைப்பொருத்தவரை  ஒரு  வாத்து  போல  தண்ணீருள்  விகவும்  வீரியமாக கால்களை  வீசிக்கொண்டு  , வெளியில்  சலனமின்றி  மிதக்கும் நிலைதான்  கூல்னஸ்    .
தயார்நிலையில்  இல்லாமல்  வெளியில்  மட்டும்  சீன்  போட்டு  , பிறகு  கீழே  விழுவது  அன்று .

இதில்  என் நண்பன்  முதலாவது . இத்தனை  இருப்பினும்  14 வருடங்களாக  IT  துறையில்  நல்லபடியாக  வேலை  பார்த்து  வருவதால்  சொல்கிறேன் .
சரக்கு  இல்லாமலா ??

முதலிலே  நான்  சொன்ன  பொதுவான  பிரச்சனைகளை [  வேலை  சார்ந்த நிலையின்மை , டிராபிக்  இப்படி]  அவனுக்கே  உரிய  விதத்தில்  டென்ஷன்  அற்று  கையாளும்  விதமே  கூல்  என்கிறேன் .அதுதான்  சரியான  வழி  என்று கேட்டால் , எனக்கு  பதில்  இல்லை  , அவரவருக்கு  அவர் அவர் வழி  ,
சந்தோஷமாக  மற்றவர்களை சீண்டாமல் வாழ்க்கையினை அதன்  போக்கில்  வாழ்வதைச்சொல்கிறேன் .....





Sunday, December 21, 2014

காவியத்தலைவன் ....

காவியத்தலைவன் ....

முதலில் வசந்த  பாலனுக்கு  ஒரு  வணக்கம்  வைத்து  விடுவோம்.
வெயில் , அங்காடித்தெரு  தெரு  , அரவாண்   போன்ற வித்தியாசமான  கதைகளைத்   தேர்வு  செய்தமைக்கு . அரவாண்  படம் சரியாக போகவில்லையென்றாலும் மறுபடியும்  , இது  போன்ற  ஒரு  வித்தியாசமான  கதைக்களத்தை  எடுத்தமைக்கு .

இவரின்  படங்கள்  நுண்ணனுபவம்   கொடுப்பமையாக  இருக்கும்  எனக்கு எப்பொழுதும் . வெயிலில்  ஒரு  குடும்பத்தில்  புறக்கணிக்கப்பட்ட மகனின்  கதை ,  பைபிளில்  வரும் prodigal  son  போன்ற  ஒரு  சாயல்  உள்ள  கதை என்று  கூடப்   படித்தேன்  எங்கேயோ.உண்மைதான் . வெயில்  சார்ந்த காட்சி அமைப்பும்  , அண்ணன்  தம்பி  பாசமும்  , ஓடிப்போன  அண்ணனின்  காதல்  அத்தியாயம்  என  படம்  நிறைய  சம்பவங்களால்  கோர்க்கப்பட்டது .விறுவிறுப்பான  கதையும்  உண்டு.  action  block  கூட  உண்டு .

சரி  காவியத்தலைவனுக்கு வருவோம் .
ஊடகத்தில்  பெரும்பாலும் நல்ல விமர்சனகள்  வந்துக்கொண்டு  தான்  இருக்கின்றன . ஆனால்  முழு திருப்தியாக  படம்  இல்லை  என்று  கூடவே  ஒரு  வரியும் எழுதி  வைத்து  இருக்கின்றனர் . 

" அவன்  ரொம்ப  நல்ல  பையன்  " என்று  காதலை  ஒதுக்கும்  பெண்களின்  மன  நிலைமை  போலத்தான்  பட்டது  அந்த  விமர்சனம்  எனக்கு.

சுதந்திரத்திற்கு  முன்பு  நடக்கும் கதை  , நாடகக் கம்பெனி பற்றியும் , அவர்கள் வாழ்கை சார்ந்த  கதைக்களம் . 

வித்சியாமான  கதைகளம்  மட்டும்  இல்ல  , படத்தின்  நிறைய  சம்பவங்கள்  இருந்தன . 

அனால் , என்ன செய்ய  , கயிற்றில் தொங்கி  , பறந்து  பறந்து  அடிக்கும்  action  இல்லை  படத்தில் . வெளிநாட்டில்  சென்று  குத்து பாட்டு  பாடும்  பாக்கியமும்  இல்லை  . ஒரு வேளை   , எழுபது   வருடம்  முன்பு  வெளி  நாடு  சென்று  அன்றைய  காலச்சூழலில் ஒரு  பாட்டு  வைத்து  இருந்தால்  வித்தியாசமாக  இருந்து இருக்குமோ!  யோசித்துப்பாருங்கள்  ஆங்கிலேய  குரூப்  dancers  அந்தாக்கால  உடை  மாட்டிக்கொண்டு  பின்னாடி ஆடிக்கொண்டு  இருக்க  ,ஹீரோ  , ஹீரோயின்  நாதா  சுவாமி  என்று  ஆடிக்கொண்டு  இருக்கும்  காட்சியினை . அப்படி  இல்லை  இந்தப்படம் !
இயல்பான  காட்சி அமைப்பு தான் கதைக்கு பலம் . அது சரிவர
செய்யப்பட்டு  இருக்கிறது .

கொடுக்கப்பட்ட  பட்ஜெட்டில்  , கதைக்கு  ஏற்ப  பாட்டுக்கள்   அமைந்து இருந்தது .குறிப்பாக  , சித்தார்த்தும்  , ஜமீன்  மகளாக  வரும்  அனைக்கா  சோனியும்  களவு  வாழ்க்கையில்  இரவில்  பாடும் " ஹே  மிஸ்டர்  மைனர் " பாட்டு  வசீகரித்தது . அவர்களின்   காதலும்தான் .அந்தப்பாடலில்  வரும்  ஒரு வரி உண்டு  , " காற்றின் காலில் கொலுசு  கட்டி இழுக்குற " , அதே  அனுபவம்  தான்  கொடுக்கிறது  அந்தப்பாட்டும் .

காலத்திற்கு ஏற்ப  போடப்பட்ட இசைப்புயலின்   இசையில்  இரண்டு[ யாருமில்லா மற்றும்  ஹே  மிஸ்டர் ]பாட்டுக்கள் காலம்  தாண்டி  நிற்கும்  என்று நினைக்கிறேன் .

ப்ரித்விராஜின்  நடிப்பை  பல  முறை பல  படங்களில்  இதற்கு  முன்பு பலர்  பாராட்டி  இருந்தாலும் , திரும்பச் சொல்லிதான்  ஆகவேண்டி  உள்ளது .
ஒழுக்கமாகவும் இருந்து   , காரியசித்தியும்  , முனைப்புடனும்  பயிற்சி  செய்து , நல்ல  பெயரும் , பாராட்டும்  கேட்கத்துடிக்கும்  இயல்பான  பாத்திரமாகத்தான்  உள்ளார்  முதலில் . இள  வயதில்   , சித்தார்த்தை  மற்ற  சிறுவர்களின்  கேலியில்  இருந்து  காக்கும்  மனமும்  அவருடைய  நல்ல மனதிற்கு  சான்று .
தன்னை விட  ஆசானிடம்  சித்தார்த்  நல்ல பெயரும்  , ராஜபார்ட்  வேடமும்  
எடுத்துக்கொண்டு  செல்லும் பொது  பொறாமையும்  , தோற்கடிக்க  வேண்டும்  என்ற  வன்மமும்  வளர்ந்து  , அது  விஸ்வரூபம்  எடுத்து என்ன  விளைவுகளைக்கொடுக்கிறது  என்று  போகிறது  அவரது  பாத்திரமும்  , 
கதையும் .  கண்களில் ஏக்கமும்  , ஏமாற்றமும்  , இயலாமையும்  , 
பொறாமையும்  பூந்து  விளையாடுகிறது . பரிதாபமாக  ஆசானிடம்  சென்று  , 
அவன்  என்னை  விட  என்ன சிறப்பாக  நடித்தான்  என்று  கேட்கும்  போதும்  , 
காதலி  ,காதலை  ஏற்க  மறுக்கும் பொழுதும்  , ஐந்து  வருடம்  காத்தபின்  , 
என்னிடம்  இல்லாத  ஒன்றை  , சித்தார்த்திடம்  என்ன  கண்டாய்  என்று  உண்மையாகவே  புரியாமல்  கேட்ககும்  நேரத்தில்  , அவர்  கேட்பது  நியாயம்  தான்  என்று  நம்மை நம்ப  வைக்கிறது  அவரின்  நடிப்பு.

சித்தார்த்தை  எங்கு  தட்டினால்  அவன்  விழுவான்  என்று  அவனது  உளவியலைப்புரிந்து   , இந்தியக்கொடி  பதித்த  ஒரு  கப்பலை  அவருக்கு  ஒரு  ஆள்  மூலமாக  பரிசளித்து  , அவரை  திசை  திருப்ப  நினைத்த  அவரது  யுக்தி  , அந்த  பாத்திரத்தின்  நரித்தனத்தின்  உச்சம் . இதை  சித்தார்த்  எப்படி  எடுத்துக்கொண்டார்  என்பதை  படம்  பார்த்துதான்  தெரிந்துக்கொள்ள  வேண்டும்.

சித்தார்த்   , இந்தப்படத்தில்  சிக்ஸர்  அடித்துள்ளார்  என்று  சொல்லித்தான்  ஆக  வேண்டும் . அவர்  குழந்தை  முகம்  , அவரின்  நடிப்பை   மறைக்கிறது  போலும்  . ஆனால்   , " அண்ணே " என்று  கோமதி  நாயகத்தை { ப்ரித்விராஜை  } அவர்  கூப்பிடும்  அழகே  தனிதான் , அந்த  பாத்திரத்தின்  மீது  நமக்கு  ஒரு  அன்னியோன்யத்தை  ஏற்படுத்திவிடுகிறது .

வேதிகா  தன்னை  விரும்புகிறாள்   என்பதை  அவருக்கு  தெரிந்து  இருந்தாலும்  , பழைய  காதல்  கொடுத்த  வலியினை  மனதில்  சுமந்துக்  கொண்டு   அவரிடம்  தள்ளி  இருக்கும்  பொழுது  அந்த  பாத்திரத்தின்  கண்ணியம்  தெரிகிறது .
காதலில்  இருக்கும்  பொது  அவரிடம்  இருக்கும்  குதூகலமும்  , கதையில்  வரும்  ஒரு  சூழ்நிலையில்  , ஆசான்  நாசரை  தூற்றும்  போதும்   தெரியும்
அவரது  வழியும்  கோபமும், அழுகையும்   நிற்கிறது  மனதில் . சிறப்பான  நடிப்பை   வெளிக்கொண்டு  வந்த  வசந்த  பாலனிற்கு   மறுபடியும்  பாரட்டுக்கள் .ஜிகர்தண்டா  , காவியத்தலைவன்  போன்று  கதைகளை  தேர்ந்து  எடுத்து  நடித்தமைக்கே  இன்னொரு  பாராட்டு சித்தார்த்திற்கு .

வணிகரீதியான   சினிமாவில்  இருந்து  ரொம்ப  தூரம்  என்று  சொல்ல முடியாது  படத்தை .  காட்சி` அமைப்புகள்  சில இடங்களில் தோய்வு  உண்டுதான் . ஆனால்  கதைக்களமும்  , கோமதி  நாயகத்தின்  வன்மமும் வளரக் காரணம்   வலுப்பட  நேரம்  எடுக்கத்தான்  செய்யும் . எங்கே  கத்திரி  போட  வேண்டும்  என்று  நானும் யோசிக்கத்தான்  செய்தேன் . முடிவுக்கு  வர முடியவில்லை .

வேதிகா  தன்   வேலையினை  சரியாக செய்து உள்ளார் . நல்ல  ஓர்  பாத்திரம்  அவருக்கும் ..

சுதந்திர போராட்டத்தில் , நாடகத்தின்  பங்களிப்பு பகுதி  சிறப்பாக  இருந்தது .
இந்தியனின்  சுகன்யா  பாத்திரம்  , பொம்மலாட்டம்` மூலமாக  இதனைச்  செய்யும் . இது  எந்த அளவு  சரித்திர  உண்மை  இருக்கிறது  என்ற  கேள்விக்கு  என்னிடம்  பதில்  இல்லை. இருந்து  இருக்கலாம் . அந்த  சமயத்தில்  அதுதானே  எல்லோரையும் அடையும் ஊடகம் .இதை  பற்றி  ஆவலைக்கிளப்பியது  படம் .

கட்டாயம்  பார்க்க  வேண்டிய படம்.
ஓநாயும்  ஆட்டுக்குட்டியும்  போன்ற  சிறப்பான  படத்தினை  புறக்கணித்த  நம்ம  தமிழ் பார்வையாளர்களிடம்  என்ன எதிர்பார்ப்பது  என்று  சரியாகத்தெரியவில்லை .இதையும்  மீறி  படம்  எடுத்த  குழுவிற்கு 
ஒரு சலாம்  .





Saturday, December 20, 2014

நான்கு வருட டிகிரி எதற்கு?? பகுதி 1

நான்கு வருட டிகிரி   எதற்கு??

"சும்மா அதே பழைய  induction  motor  ஒட்டிட்டே  இருக்காங்க. 50-60 வருஷமா....
எனக்கு  புதுசா ஏதாவது  செய்ய  வேண்டும் "

இந்த பதில்  என்னுடைய முதல்  கம்பெனியில் கூட  வேலை  பார்த்த நரேன்  என்ற நண்பர் தன்னுடைய  " campus interview "  போது  electrical  துறை  சார்ந்து  கேட்கப்பட்ட  ஒரு  கேள்விக்கு சொன்ன பதில்.

இந்த  பதிலுக்கு பிறகும் அவனை வேலையில்   அமர்த்தினர் .எல்லோரும் செய்வார்களா  என்று தெரியாது. ஆனால் , அவனிடம்  இருந்த  " ஸ்பார்க்/spark " அல்லது  புதிதாக  எதையாவது  செய்ய  வேண்டும்  என்ற  உந்துதலை  , நேர்முகத்   தேர்வு   செய்தவருக்கு பிடித்து  இருந்தது  ...அது பொய்யாகவில்லை .அவன்  இன்றைக்கு  வேறு ஒரு  நிறுவனத்தில்  , " Vice  president " அளவிற்கு குறுகிய  காலத்தில் வளர்ந்து  உள்ளான் .

அவனுடைய  மதிப்பெண்  என்று  தியாகராசா  கல்லூரியில்  பார்த்தால் , ரொம்பக்  குறைவு தான் . ஆனால்  துறை சார்ந்த  நுண்ணறிவும் , ஈடுபாடும் , புதிதாக  செய்யத்தூண்டும்  முனைப்பும்  அவனை  முன்னுக்குத்  தள்ளி  இருக்கிறது. நம்முடைய  கல்வி  முறை பெரும்பாலும் மதிப்பெண்  சார்ந்தே  இருக்கிறது . கல்லூரியில்  90% வைத்து இருந்தால்  , அது  பெரிய சாதனையாக  பார்க்கப்படுகிறது. 90% வாங்குவது கடினம்  தான்  , ஆனால்  அதை  மட்டுமே அளவுகோலாக  வைக்க முடியாது .

நான்  பார்த்த  வரையில் +2 வில்  "district  toppers" ஆக வந்த  பலரை  பல  கம்பெனிகளில்  சாதாரண  இடை  நிலை ஊழியர்களாக இருக்கிறார்கள்   , ரொம்ப  வருடங்களாக . நரேன்  போன்று குறைந்த  மதிப்பெண்களுடன்  மேல  சென்றவர்கள் நிறைய .

இது  போன்ற  சில  உதாரணங்கள்  என்னை சிந்திக்க வைத்தது.
நான்கு வருட  டிகிரி  எதற்கு?? பரிட்சைக்கு  முன்பு  பெரும்பாலும்  புத்தகத்தில்  இருந்து கேட்கப்படும்  கேள்விகளை  , நியாபகம்  வைத்து  எழுதுகிறோம் , இதில் இன்ஜினியரிங்  என்ன  இருக்கிறது .

இன்ஜினியரிங்  என்றால்  என்னவென்று  ஒரு முறை  பார்த்து  விடுவோம் .
விக்கிபீடியாவில் இருந்துதான் வேறு எங்கே!

"

Engineering (from Latin ingenium, meaning "cleverness" and ingeniare, meaning "to contrive, devise") is the application of scientificeconomic, social, and practical knowledge in order to inventdesign, build, maintain, and improve structures, machines, devices, systems, materials and processes

"

இதில்  invent , design  எல்லாம்  நாம்  எங்கே  செய்கிறோம் நம் கல்லூரிப்படிப்பில் .கல்லூரி  முடிந்து  வந்து  வேலையில்   உண்டா? பார்ப்போம்.

நம்மில் பெரும்பாலோர் துறை சார்ந்த வேலை  பார்ப்பது  இல்லை.
EEE  , ECE , Instrumentaion  , Mechanical , PRODUCTION , AUTOMOBILE , BIOTECHNOLOGY , CIVIC , ARCHITECTURE  இப்படி  என்னென்னவோ  துறையில்  நான்கு  வருடம்  படித்துவிட்டு  , கடைசியில் நம்மில்  90 சதவிகித படித்தவர்கள் வேலை   பார்ப்பது  கணிப்பொறி  சார்ந்த  IT  துறையில்தான் . என்னுடைய  கல்லூரியினை எடுத்துக்கொண்டால்  கூட  கையில் எண்ணிவிடும்  அளவிற்குதான்  துறை சார்ந்த  வேலையில்   இருக்கின்றனர் . எல்லோரும்  விரும்பிச்  செய்யவில்லை .
குறிப்பாக , mechanical துறை  சார்ந்த  என்னுடைய  நெருங்கிய  நண்பன்  , கல்லூரியில்  கணிப்பொறி  துறைக்கு வேலைக்கு போவோரை  கிண்டல்  கூட  செய்த  நாள்  உண்டு . அவன்  இன்றைக்கு  அதே  software  துறையில்  பெரிய  மேனேஜராக  உள்ளான் .அவன்  கல்லூரி  நாட்களில்  , Mechanical  துறை  சார்ந்து  "technical  papers " எழுதி , conference  களில்  கலந்து  கொண்டதும் ,
அவன்  துறை  அல்லாத  மற்ற  துறையில்  வேலை  தேட வேண்டாம்  என்றும்  இருந்தது  எனக்கு நன்றாக  தெரியும் . வீட்டில்  சில மாதங்கள்  வேலை  இல்லாமல்  இருந்தான் ,  நண்பர்களும் , கூடப்பிறந்தவர்களும்  வேலை  போகத்தொடங்கினர் . அவனுக்கு நம்பிக்கை  இருந்தது  அவனுடைய  துறையிலே  வேலை  வாங்கிடலாம்  என்று . அனால்  ஒரு  காலத்திற்கு  பிறகு சூழ்நிலை  காரணமாக  , பெரிய  IT  கம்பெனி  ஒன்றில்  கம்ப்யூட்டர்  துறையில்  வேலைக்கு  சேர்ந்தான் .

அவன் interview  முடிந்து  வந்து  , " வேலை உண்டு  என்று  சொல்லி  இருக்கிறார்கள் " என்று  சுரமே  இல்லாமல்  சொன்னது  , அவனுடைய  கனவு  தகர்ந்ததின் வெளிப்பாடே . இன்றைக்கு  நன்றாகத்தான்  உள்ளான் .
அப்போ  என்ன  பிரெச்சனை  என்று  தானே  கேட்கிறீர்கள் .! சொல்கிறேன் .
சில  உதாரணங்களை  பாப்போம் .

 ஜப்பான்  போன்ற  ஒரு  சிறய  நாடு  , TOYOTA , HONDA  என்ற  இரு  கம்பெனிகள்  மூலமாக , உலகின் , குறிப்பாக  அமெரிக்காவில் ஒடும்  , மூன்றில்  ஒரு  கார்  [ தோரயமாக], இந்த  இரண்டு  கார்  கம்பனிகளில்  இருந்து  தான் .அதற்கு காரணம்  இருக்கிறது .நம்ம  ஊரில் ஹீரோ ஹோண்டா  பைக்கிற்கு  முன்பு  ஒரு  விளம்பரம்  வரும்  , " FILL  IT , SHUT  IT  , FORGET  IT :.
அதாவது , பெட்ரோல்  மட்டும்  ஊற்றிக்கொண்டு   இருங்கள் , மற்றபடி  வண்டி  பிரெச்சனை  இன்றி  ஓடிக்கொண்டு  இருக்கும்  என்று .
அதேதான் ஹோண்டா  கார்களும்  , டொயோட்டா  கார்களும் . பிரெச்சனையே  இன்றி  ஓடும்  என்பது  அர்த்தம்  அல்ல .

1) இன்றைக்கு  அமெரிக்காவில்  ஓடிக்கொண்டு  இருக்கும்  10-20 வருட  பழைய  கார்கள்  என்று  பார்த்தால் அது  பெரும்பாலும்  , இந்த இரண்டு  கம்பெனி யின் கார்கள் தான் . ஏன்  என்றால்  , அவர்களுடைய  , " ENGINE and  TRANSMISSION  " அவ்வளவு  சிறப்பு.

2) Maintenance  செலவு  குறை

3) முன்பு எல்லாம்  பெட்ரோல்  விலை குறித்து  கவலைப்படாத  அமெரிக்கர்க்கள்  இன்றைக்கு  mileage  பற்றி  யோசிக்கத்தொடங்கியுள்ளனர் .
அதிலும்  மேற்சொன்ன  இரண்டு  கம்பெனி கார்கள் சிறந்து  விளங்குகின்றது .

இதை எல்லாம்  ஏன்  சொல்கிறேன்  என்றால்  , எவ்வளவுதான்   ஆட்டோமொபைல்  துறை  அமெரிக்காவில்  வளர்ந்தாலும் ,சிறிய   நாடான  ஜப்பானின்  ஆட்டோமொபைல் துறை  நிபுணத்துவத்தில்  ஜப்பானியர்களை  அடித்துக்கொள்ள முடியவில்லை . அதற்கு   காரணம்  அவர்களது  குறிப்பிட்ட  ஆட்டோமொபைல்   துறை  சார்ந்த ஆழ்ந்த  அறிவும்  , அதில்  அவர்கள்  வைத்து  இருக்கும்  தரக்கட்டுபாடும் தான் .  கணிப்பொறி  துறை  மட்டும்  அல்ல  , இது  போன்ற
"automobile  and  manufacturing"துறையில்  கணிப்பொறி   துறையினைக்காட்டிலும்  வேலை வாய்ப்புகளும் , நாட்டின்  GDP  யினை  கூட்டும்  வாய்ப்பும்  உள்ளது . இதற்கு  அவர்கள்  நாட்டின்  கல்வித்திட்டமும்  ஒரு  காரணம் . எந்த  துறையில்  படித்தாலும்  , கம்ப்யூட்டர்  துறையில்தான்  வேலையென்று   இல்லாமல் படித்த  துறையில்  வேலை  செய்தால் நம்மால் சிறந்த  ப்ராடக்ட்ஸ் கொண்டு  வர  முடியும்.

வெளிநாட்டு தொழில் நுட்ப உதவி  பெரிது  இல்லாமல்  , நம்ம  நாட்டிலேயே
சொந்தமாக  நடுத்தர  மக்களும்  கார்  வாங்க கொண்டு வரப்பட்ட  ஒரு முயற்சிதான்  " மாருதி உத்யோக் "  . ராஜீவ்  காந்தி ஆட்சியில் தொடங்கப்பட்ட
இந்த கம்பெனி   அன்றைய  காலத்தில் 35000 ரூபாய்க்கு ஒரு  கார் தயார் செய்தது . இது  ஒரு நல்ல முயற்சி . பிறகு  நம்மிடம் அதை  அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சிறந்த  தொழில்நுட்பம்  சரியாக  இல்லாததால் , ஜப்பானின்  , "SUZUKI  " கம்பெனியுடன்  பார்ட்னெர்ஷிப் வைத்துக்கொண்டது .
படிப்படியாக  மாருதி  என்ற  பெயர்  , பெயருக்கு மட்டும்  இருந்துக்கொண்டு  பெரும்பான்மையான  கம்பெனியின் ஷேர்  , சுசுகி  கம்பெனிக்கு சென்றது.
அது  தொடங்கின காரணம்  வேற ,இப்பொழுது  அது  செயல்பட்டுக்கொண்டு  இருக்கும்   காரணம்  வேற.

நம்மிடம்  சுசுகி அளவிற்கு தரமான  கார்  இஞ்சின் /engine  இல்லாதது ஒரு  முக்கிய  காரணம். நம்ம  நாட்டிலும்  mechanical /automobile  துறையில் சரியான  வல்லுனர்களை வளர்த்து விடும்  சூழல்  இருந்து  இருந்தால் , இது  ஏன்  நடக்கணும். . செவ்வாய்க்கு ராக்கெட்  விடத்தெரிந்த  நமக்கு  , தரையில்  செல்ல  நல்ல  கார் இஞ்சின்  செய்ய  முடியாதா  என்ன?

சந்திராயன் சாத்தியம்  ஆக அதற்கு உண்டான  சூழலை  , ISRO  ஏற்படுத்திக்கொடுத்தது போல  , வேறு  ஒரு நிறுவனம்  ஏற்படுத்திதர  வேண்டும் . நம்மால்  முடியாதா  என்ன ?
நிறைய  கம்பெனிகள்  இது  போல  அந்த  அந்த  துறை  சார்ந்த  வேலைதர  தயாராக  இருந்தால்  , நம்மவர்கள்  ஏன்  , படிப்பிற்கு  சம்பந்தம்  இல்லாத  துறையில் வேலை  பார்க்கப்போறோம் .

என் நண்பன்  போன்று ஆட்டோமொபைல்  கனவுகளுடன்  இன்று  கணிப்பொறி  தட்டிக்கொண்டு  இருக்கமாட்டார்கள் . ஒருவன்தானே  என்று  சொல்லிவிட  முடியாது .அவன்  போன்ற  பெரும்பாலோர்  படித்தது  ஒன்று  வேலை பார்ப்பது  ஒன்று . என்னதான் கிடைத்த  துறையில் வேலை பார்த்தாலும்  , முழு  ஈடுபாடும் சந்தோஷமும்  அவர்கள்  துறை சார்ந்த  வேலையில்  தான்  இருக்க  சாத்தியக்கூறு  அதிகம் .  கிடைக்கும்  சம்பளத்துக்கும்  , நம்முடைய  வேலையினைக்காப்பாற்றிக்கொள்ள மனதை இழுத்து வைத்து
 பழக்கப்படுத்திக்கொள்ளச் செய்து , அதன் பின் செய்யும்  வேலை
 பெரும்பாலும்  உன்னதமான  விளைவுகளை கொடுக்கும்மா என்ற  கேள்வி  எழத்தான்  செய்கிறது .

அப்பொழுது  நம்ம  நாடு  IT  துறையில்  வளர்ந்து  உள்ளதே  என்று  கேட்கத்தோன்றும் .வளர்ந்து  உள்ளோம் , ஆனால் "service sector " இல்  தான் .
அதாவது  வெளிநாட்டு  கம்பெனி  ஒன்றிற்கு  நாம் மலிவு விலையில்
" technical  coolie " வேலை பார்க்கிறோம்  அவ்வளவுதான் . அந்தத்  தயாரிப்பு [product  ]அவர்கள்  பெயரில் தான் வெளி வரும்  , லாபமும்  தான் , அதுதானே  நடக்கும் .

நாமே ஆராய்ச்சி [  Research and  developement ]  செய்து  , நமது பெயரில்  ஒரு  நல்ல  கார்  இஞ்சின்  கொண்டு வந்து  , அது  தரக்கட்டுபாடு  செய்யப்பட்டு  , அது  விற்கப்பட்டு  நமக்கு  லாபம்  ஈட்ட  வேண்டும் .

இது  மென் பொருள்  என்ற  சாப்ட்வேர்/IT துறைக்கும்  பொருந்தும்.
Microsoft  , google  , CISCO  இப்படி பல  பன்னாட்டு  நிறுவங்களுக்கு  அவர்கள்   " products " செய்வதற்கு  மென்  பொருள்  வல்லுனர்கள்  தேவைப்படுகின்றனர் .
நம்மாளுங்க  அந்த  வேலையினை  மலிவாக  செய்கிறோம் . அதனால்  நம்மிடம்  வருகின்றனர் . நம்முடைய  வேலை  கோடிங்  , அல்லது  project  management அல்லது  sales  போன்ற  சம்பளம்  வாங்கிவிட்டு   செல்லும்  வேலையில்தான்  உள்ளோம் .  நம்முடைய  பெரிய  கம்பெனிகளும்  இதைத்தான்  பெரிய  அளவில்  செய்கின்றன . ஒரு விதத்தில்  சொல்வதென்றால் , ஆள்  பிடித்துத்தரும்  " body  shopping " வேலை  தான்  பெரும்பாலும்  செய்கின்றன .இதை  நம்மூரிலும்  செய்வோம் [ offshore ],அல்லது அவர் நாட்டில் அவர்கள் அலுவலகம் சென்று செய்கிறோம் .
[onsite ].

கொத்தனார் ,சித்தாள் என்ன செய்கின்றனரோ அதேதான் .
apartment கட்டி கொடுத்து காசை  வாங்கிக்கொண்டு போய் விடவேண்டும் அவ்வளவுதான் .apartment விற்றுவிட்டு வரும் லாபம் நமக்கு இல்லை ,எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை,பணம் போட்டு "RISK" எடுத்தது அந்த கம்பெனிகள் தான் . நாம் ஏன்  அப்படி  products  செய்து  வெளிக்கொண்டு  வரக்கூடாது ? பணம் போடுவது  ஒரு பக்கம்  , அதை செய்ய  நமக்கு  ஒரு
சாதகமான சூழல்  [" ecosytem " ]  வேண்டும் .  அதாவது  , மக்கள்  தேவை  என்னவென்பதை  அறிந்து  ,எதில் காசைப்போட்டு  ஆராச்சி  செய்யலாம்  என்ற  நுட்பமான  அறிவும்  ,அதை  செய்து  முடிக்க  ஆராச்சி  மனப்பான்மை உடைய  படிப்பறிவும்  உடைய  வல்லுனர்கள் தேவை . நம்முடைய  இன்றைய பாடத்திட்டம்  பெரும்பாலும்  சில  கல்லூரிகளை தவிர்த்து இதற்கு  தயார் இல்லை .கொடுக்கும் வேலைதனை , இப்படி  செய்யவேண்டும்  என்று  முன்பே  ஒருவர்  முறை  செய்து  பார்த்து  , அதனை " documentation " செய்து வைத்து  , அதை பார்த்து திரும்ப  செய்யும்  வேலைதான்  நாம்  பெரும்பாலும்  செய்கிறோம் .புதிதாக  ஒன்றைக்கண்டுப்பிடித்து  அதில்  நம்முடைய  கம்பெனிகள் எத்தனை  காப்புரிமை [ " patent "  ] வாங்கி  உள்ளது  என்று  பார்த்தால்  ரொம்பக்குறைவு  தான் .

இந்த அடிப்படை பிரெச்சனை நம்ம கல்வியின் அணுகுமுறையில் இருந்து தான் வருகிறது என்பது என்னுடைய எண்ணம் .
நாமே முயன்று ,ஆராய்ச்சி செய்து தயாரிப்புகள்  கொண்டு வரவேண்டும் என்கிற ஆராய்ச்சி அறிவும் , பயன்பாட்டு  சார்ந்த  அறிவு [application based knowledge] நமக்கு சொல்லிதரப்படுவது  இல்லை, அல்லது  அப்படி  ஒரு  சூழல்  அமைத்துத்  தரப்படுவதில்லை .

நம்ம படிப்பு பெரும்பாலும்  ,நினைவாற்றல்  சார்ந்து  தான்  இருக்கிறது .
அதாவது  " Pythagorus " தேற்றம்  என்பது அவர்  கண்டுபிடித்த  சமன்பாடு .
அதை  வைத்துக்கொண்டு  இயல்பு  வாழ்க்கைக்கு தேவைப்படும்  பயன்பாடு [
application ] என்னவென்பதை  நம்ம பாடத்திட்டம்  சொல்லிதர  வேண்டும்.

"pythagorus"  சமன்பாட்டை  உரு  தட்டி  வந்து  எழுதுவதில்  என்ன பயன்?
என்ன நான் சொல்வது  சரிதானே !

இப்படிப்பட்ட  ஒரு படிப்பை  படிக்க  நான்கு  வருடங்கள்  தேவையா ?


இந்த தலைப்பில்  இன்னும் நிறைய  பேச வேண்டி இருக்கறது .....
பேசுவோம்.


Sunday, December 14, 2014

படம் பார்த்த அனுபவம் :

லிங்கா  லிங்கா  லிங்கா ..எங்கு பார்த்தாலும் லிங்கா மயம்  ....இல்லை  மாயையா ??வீட்டில் , மாலில் இன்னும் எங்கே  எங்கேயோ  எல்லாம் ....லிங்கா  பார்த்த  பேச்சுக்கள் , புகைப்படங்கள் ,விமர்சனங்கள் ..

கொஞ்சம் வித்தியாசத்திற்கு படத்தின்  கதை   பற்றிய  பேசமால் , படம்  பார்த்த  அனுபவம் குறித்து  பேசலாம்  என்று  தோன்றியது..

நம்மில்  பலருக்கு வித்தியாசனமான  படம்  பார்த்த  அனுபவங்கள்  இருந்து  இருக்கும் ....

தியேட்டருக்கு  போகும்  அனுபவமாக  இருக்கலாம்  , சென்ற பின்  படம்  ஆரம்பிக்கும்  முன்  இருக்கலாம்  , அந்த  தியேட்டர்  சார்ந்து  இருக்கலாம்  , பக்கத்துக்கு  சீட்டில்  உக்காந்து  இருப்பவரால்  இருக்கலாம் ..இப்படி  பல...

எனக்குச்   சில  உண்டு ....

சில வருடங்களுக்கு முன்பு  பெங்களூருவில்  தமிழ்  படங்கள் ரிலீஸ்  ஆகாது  சில மாதங்களுக்கு ....நானும் என் நண்பன் விஜயனும்  , ஹோசூர்  செல்வோம்  படம்  பார்க்க . நம்ம  ஊரு  சாப்பாடு  ஒரு  பிடி  பிடிச்சுட்டு படமும் பார்த்துட்டு வருவோம்  விடுமுறை  நாட்களில் . படு  சிக்கனம்  வேற .
ஒரு முறை  நான்  தனியாக  சென்றேன் ....எல்லாம்  என்  நேரம் , கூடே  அவன்  இருந்தால்  காப்பாத்தி  இருப்பான் போலும் .

என்ன படம்  , எந்த  நடிகர்  என்று  வேண்டாமே.....
கூட்டம்னா  அப்படி  ஒரு  கூட்டம் .......தியேட்டர்  வெளியே  பிதிங்குக்கொண்டு  இருந்தது....திரும்பி  போகலாம்னா  அவ்ளோதூரம்  வந்தாயிற்று ....
நிறைய  பேர்  நின்றுக்கொண்டு  இருக்கையில் , படம்  ஆரம்பிக்கும்  நேரம்  ஆகிவிட்டது....ஆனால்  கவுன்டடர்  அருகில்  சிலர்தான்  நின்றனர் ...என்னடா  இது  என்று  போய்  நின்று  பார்ப்போமே  என்று போய்  நின்றேன் ..ஒரு வேளை  A  C  டிக்கெட்  வாங்க  அவ்ளோ  கூட்டம்  இல்லைன்னு நினைப்பு வேற ....உள்குத்து  வேறன்னு  அப்புறம்  தான்  தெரிந்தது ......டிக்கெட்  கவுன்டரில்  டிக்கெட்  கொடுக்கும்  போது  என்னத்தையோ  சொல்லிக்கொடுத்தார் ...சத்தத்தில்  சரியாக  கேட்கவில்லை ...சரியென்று  உள்ளே  போனால்  , படம்  ஆரம்பித்து......பாட்டு  வேற  ஓடிக்கொண்டு  இருந்தது ......நானும்  சுத்தி  முதி  இருட்டில்  தேடுகிறேன்  , முன்  ரோவில்  கூட  சீட்  காலி  இல்லை..
எதுக்கு இவன்  டிக்கெட்டை  கொடுத்தான்  என்று  முழிக்கையில்  , சற்று  இருட்டு  விலகி  , நிலைமை  புலப்பட்டது...

அங்கே ஒரு  100 பேருக்கு மேல எல்லா இடத்திலும்  unreseved  compartment போல  நின்றிக்கொண்டு  படம்  பார்த்தனர் ....இதைத்தான்  டிக்கெட்  கொடுப்பவர்  சொல்லி இருப்பார்  போல ...
தலைக்கு  மேல  வெள்ளம்  போன கதையா அந்தக்கொடுமைய  செவரோடு சாய்ந்து நின்று  பார்த்து  தொலைத்தேன் ......ஏன்  அப்படி  செய்தேன்  என்று  இப்போ யோசித்து  பாத்தாலும்  பதில்  கிடைக்கவில்லை .....சும்மா வீடு  திரும்பினால் , அவ்வளவு  தூரம் வந்து போன  அர்த்தம் இல்லையென்று  ஆகிவிடும்  என்றா? தெரியவில்லை...

சரி  படம் என்னன்னு  கேப்பது தெரியுது ....இன்டர்வெல்லில்  முட்டுக்கு   kerchief  கட்டிய  கும்பல்  அலைந்து க்கொண்டு இருந்தது ..எனக்கு  அவ்வளுவுதான்  நியாபகம்!

அடுத்த  ஒன்று  வித்தியாசமான  அனுபவம் ....இனி அது  போல  கிடைக்குமா  என்று  தெரியவில்லை.சின்ன  வயதில்  வத்தலகுண்டில் ஆச்சி  வீட்டுக்கு  கோடை  விடுமுறை  நாட்களில்  செல்லும்பொழுது  , கோவில்  திருவிழாவும்  இருக்கும் ..

தெருவை  கொஞ்சம்  வழிமறித்து   , பெரிய  மூங்கில் கம்பு  நட்டு  , வெள்ளை  திரையில்  இரவு  எல்லாம்  மெல்லிய  குளிரில்  படம்  பார்த்த  காட்சிகள் ....
ஊர்  மக்கள்  கூடி  தொடர்ந்து படம்  ஓடிக்கொண்டு  இருக்கும் ...
இன்றைக்கும் தூத்துக்குடி  SPIC  nagar  போன்ற  கூட்டு குடியமைப்புகளில்   இது  போன்ற  காட்சிகள்  உண்டு  எனக்கேள்வி .

இது போல  வேறு சில  அனுபவங்களும்  உண்டு ....
இன்னொரு  முறை  வத்தலகுண்டு  செல்லுகையில் , நடு  இரவு பஸ்  கிடைக்கும்  வரை  , பழனியில்  "மேட்டுக்குடி " எதிர்பாராமல் இரவுக்   காட்சி பார்த்தது, ..

பின்பு எர்ணாகுளத்தில்  சித்தி  வீட்டு  அருகில்   " அழகன் " பார்த்து  முடித்து  , அடுத்து  வீட்டுக்கு  போய்  என்ன  செய்யப்போகிறோம்  என்று  நினைத்து  , அங்கேயே   pop  corn  சாப்பிட்டு  , அடுத்த  காட்சியில்  ஓடிய  "உள்ளடக்கம் " என்ற  மலையாள  படத்தையும்  பார்த்த  அனுபவம் ......

இப்படி  இன்னும்  ...
கடைசியாக  ஒன்று .

G  C  T இல்  படிக்கும்  பொழுது  எங்கள்  ஆடிடோரியத்தில்  இது போன்ற கல்லூரி  நண்பர்கள்  உட்கார்ந்து  படம்  பார்த்த  அனுபவமும்  உண்டு .
" கோபாலா  கோபாலா " என்ற  பாண்டியராஜனின் எசகு  பிசகான   வசனம்  உடைய  படம்  ஒன்று  போடப்பட்டு  , பெண்கள்  பெரும்பாலோர்   இடைவேளைக்குள்  காலி  செய்தது  நியாபகம்  இருக்கிறது .
நிஜமாகவே  போக  வேண்டும்  என்று  தோன்றியதா  இல்லை  , படம்  போடுகின்றனரா  என்ற  கேள்வி  எழுந்தது  அப்பொழுது .இன்று  வரை  யாரிடம்  கேட்டதில்லை!. ஏன்னா , கொஞ்சம்  கொஞ்சமாக  கூட்டம்  கலைந்தது . சிலர் கிளம்பி  விட்டனர் முதலில்  , அப்பறம்  மற்றவர்கள் கிளம்புவதற்காக  சிலர்  கிளம்பினார்கள்  போல ...

இந்த  காலத்தில்  எங்கே   இரட்டை அர்த்த  வசனங்கள் ...நேரடியாக  ஒரே  அர்த்தத்தில்  தானே  பேசுகின்றனர்!

டூரிங்  டாக்கீஸில்  பார்க்கும்  ஆசை மட்டும் இன்னும்  நிறைவேற  இல்லை....
மண்  குமித்து  கொட்டகையில்  உட்கார்ந்து  பார்க்கும்  அனுபவம் ...அப்படி  தியேட்டர்கள்  எத்தனை  உள்ளது  என்று  தெரியவில்லை இன்றைக்கு .
தியேட்டர்கள்  எல்லாம்  வணிக வளாகங்களாகவும்  , கல்யாண  மண்டபங்களாகவும்  மாறி  வருகின்றன . என்  நண்பன்  ஒருவன்  குடும்பமும்  ரொம்ப  வருடங்களாக  விருது நகரில்  வைத்து  இருந்த  தியேட்டரை  விற்று  விட்டதாக  சொன்னான்   சில வருடங்கள்  முன் . மகன்கள்  இருவர்  படிப்பிற்கும்  , அவர்களை செட்டில்  செய்வதற்கும்  அப்பா  செய்த  தியாகம் .
மகன்கள்  இருவரும்  நன்றாக  இருக்கின்றனர்  இப்பொழுது .

ஆனால் , ஒவ்வொரு  முறை  பார்க்கும்  போதும்  , "என்ன படம்  இப்பொழுது ?" என்று  கேட்கும்  சந்தர்ப்பம்  இல்லை  இப்பொழுது  எனக்கு...அந்த  ஊரின்  ஒரு அடையாளம்தானே  அந்த  தியேட்டரும் ...






.

Friday, December 12, 2014

கொஞ்சம் உள்ளிருக்கும் ஈரத்தை வெளியே சொட்ட விடுவோம் :


நகர  வாழ்கையின் அவசரம்  நம்மை எதையும் சட்டை செய்யாதவர்களாக மாற்றி உள்ளது .எல்லோரையும் சொல்ல  முடியாது .ஆனால் பெரும்பாலும் .

ஒரு பைக்கில் பெங்களூர் பன்னேர்கட்டா பாலம்  அருகில் ஒரு  வழிப்பாதையில்  சரியாக  சென்று கொண்டு இருந்த எனக்கு முன்பு நடந்த விபத்து மேற்சொன்ன  எண்ணத்தை  இன்னும்  அதிகமாக என்னையே  நம்ப  வைத்தது.இமைக்கும் பொழுதில் சின்ன சந்தில் இருந்து சட்டுன்னு ஒருவன்  ஒன் வேயில் தவறான திசையில் உள்ளே  நுழைந்து , எதிர்பாராமல் நான்   பல்சரில் திடீர்  பிரேக்  அடித்து  , பைக்  நிலை குலைந்து விழுந்து ,
தரையில் நங்கு  என்று  அடித்து  , rebound  ஆகி  கொஞ்சம்  தூரம்  இழுத்து சென்று, வண்டியின் பெட்ரோல் டான்க்  என் காலில் மாட்டி , காலில் லிகமென்ட்  முழுவதும் அறுந்து போய்  , surgery  செய்து  , கம்பு  இன்றி  நடக்க  மாதங்கள்  ஆனது .

இந்த சம்பவத்தில் பல விஷயங்கள் புலப்பட்டது  எனக்கு , நகர  வாழ்கையின் அவலம் . கீழே  விழுந்து கிடந்த  என்னை  தூக்கி  விட  சிலர் வந்தனர் .அது  வரைக்கும் சந்தோசம்.லேப்டாப் , cell  phone  இங்கும் அங்கும்  சிதறி  கிடந்தது .
அடிபட்ட அதிர்ச்சியில் அரை மயக்கத்தில் இருந்த  என்னை  ஓரமாக  , சாலை ஓர நடைபாதையில் படுக்க  வைத்து  விட்டு , வந்து  கொண்டு  இருந்த  ஆட்டோவை நிறுத்தி  ஏற்றி விட்டனர் .எதிரே வந்தவனை  பிடித்து அவனை  என்னுடன் போகச்சொல்லி  அனுப்பியும்  வைத்தனர் . நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் . தவறாக  வண்டி  ஒட்டியவன்   கூட்டம்  கலைந்ததும் வண்டியில்  பறந்து  விட்டான் . எவ்ளோ  நல்ல மனசு !

ஆட்டோ  காரருக்கு  அதை  விட நல்ல மனசு.
எழுந்து  நிக்க  முயன்ற  பொழுது  , வலது காலில்  ஏதோ மொழுக்கு  என்று  இருந்தது .வலி பெரிதாக இல்லை , ஆனால்  என்னவென்று தெரியவில்லை , நிக்க முடியவில்லை சரியாக . நொண்டி நொண்டி தான் ஆட்டோவில்  ஏறினேன் . ஆட்டோக்காரனும்  பார்த்தான் .ஒரு பத்து அடி  நகர்ந்ததும்  , " நீங்க
நல்லாதானே  இருக்கீங்க , இறங்குங்க  , எனக்கு  இந்த சவாரிய   பாக்கணும் "என்று  சொல்லி  , என் பதிலை  கூட  எதிர்பார்க்காமல்  நடு ரோட்டில் இறக்கி  விட்டு சென்றான்.

ஒரு அரை  மயக்கத்தில் வண்டி அடியில்  மழை நீர்  அருகில்  படுத்துக்கொண்டு  , என் அலுவலக  நண்பர்களுக்கு போன் செய்தேன் . மயக்கம் போட்டு விழுந்தால் செல் போன்  , லேப்டாப்  அம்பேல்  ஆகி விடும் என்று  தெரியும் .

சட்டை  , பாண்ட்  கிழிந்து  ஒருவன் தெருவோரம்  கிடக்கிறானே  என்று  பார்த்தவண்ணம்  சென்றனர் , ஒருவர்  கூட என்னவென்று  உதவிட  வர வில்லை. இந்த  ஏரியாவில்  கிடக்கிறேன் , ஒரு வேலை  என் போன்  வேலை செய்யவில்லை என்றால்  ,தேடி  கண்டு  பிடியுங்கள் என்று  சொல்லிவிட்டு வைத்தேன் . படையாக  நண்பர்கள்  வந்தனர் . நல்ல வேலை  முழுவதும்  மயங்க  வில்லை.

2 நிமிடத்தில் hospital  இருந்தது . இதை அந்த ஆட்டோ டிரைவர்  கொண்டு  சென்று  விட்டு இருக்கலாம்தான். தெருவில் கிடந்த  இருபது நிமிடம்  , என்னால் என்றும்  மறக்க முடியாது .

வீடு வந்து  சேர்ந்த  பின்தான் , நண்பர்  ஒருவர்  என்  ஹெல்மெட்டை  காண்பித்தார் . ஒரு இடத்தில  கல்லோ  எதுவோ குத்தி  பெரிய  குழி  விழுந்து  இருந்தது . அது  மண்டையில் ஆகி  இருக்கவேண்டியது.

எல்லோரும்  ஹெல்மெட்  அணியுங்கள்  தவறாமல் . வீட்டில்  நமக்கு  
எதிர்பார்த்து   உள்ளனர். 

கொஞ்சம்  திரும்பி நம்மை  சுற்றி என்ன நடக்கிறது  என்று  அந்த  தெருவில் சென்றவர்  பார்த்து  இருக்கலாம் .அப்படி அடிபட்டு  தெருவில்  கிடக்கும்  ஒருவனுக்கு சரியாக உதவிட  கூட  இல்லாமல்  , அந்த ஆட்டோ காரனுக்கும்  , தெருவில்  கடந்து செல்பவருக்கும்  என்ன  அவசரம்.???????

அடுத்த  சம்பவம்  ஒன்று இருக்கிறது .
இது சென்னையில் நடந்தது .

ஈக்காட்டுதாங்கல்  அருகில்  ஒரு ஆட்டோ  கவுந்து  கிடந்தது இருக்கிறது  . ஆட்டோ டிரைவர்  தலையில் அடிபட்டு  ரத்தம் , பெரிய கூட்டம் . அவரை  தூக்கி விட்டு  , முதல் உதவி  செய்யாமால்  வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்  ஒரு  பெரிய  கூட்டம் .
தற்செயலாக  என்  நண்பர்  ஒருவர்  அந்தப்பக்கம்  சென்றுக்கொண்டு  இருந்து  இருக்கிறார் .சிலர் உதவிட வந்தனர் ஒரு  வழியாக   , ஆட்டோ  நிறுத்தி  ஏற்றியும்  விட்டனர் . அனால்  அடிபட்ட  அவருடன் செல்ல  யாரும் தயாராக இல்லை.

" ஏதற்கு  வம்பு  " என்றுதான் .
கூடயே  நண்பரும்   இன்னொருவன்  மட்டும்  சென்று  உள்ளனர். அருகில்  உள்ள பாலாஜி  ஹொச்பிடல்க்கு . "accident  case  எடுக்க மாட்டோம்  ,தலையில்  அடிபட்டு  உள்ளது  "என்று  சொல்லியுள்ளனர் . கொஞ்சம்  பேசி   , முதல்  உதவி  மட்டும்  செய்ய  ஒப்புக்கொண்டு  உள்ளனர் .

" ஹாஸ்பிடல்   rule  சார் , நான்  இங்கே  மேனேஜர்  , இது  போன்ற  கேஸ்  நாங்க  எடுக்க  முடியாது . போலீஸ்  பிரெச்சனை " என்று  தீவிர  சிகிச்சை  செய்ய மறுத்து , அப்போதைக்கு முதல் உதவி  மட்டும் செய்து  விட்டு உள்ளனர் .

உறவினர்  வந்து  G  H  எடுத்து செல்லுங்கள் என்று  சொல்லி  இருக்கின்றனர் .
அவர்  போதையில்  இருந்து  உள்ளார் .வீட்டு  முகவரி  கூட  தெரியவில்லை  அந்த நிலைமையில்.ஒரு  வழியாக  எப்படியோ  அவர் உறவினருக்கு  தகவல்  சொல்லி  , பிறகு  அவர்கள் வருவதற்குள்  , போலீஸ்  வந்து  விட்டது .
இங்குதான் கவனிக்க  வேண்டும் , "நீங்கள் யார்  , என்ன நடந்தது"  என்று  கேட்டு  விட்டு  , அடி பட்ட   இடத்திற்கு  FIR  poda  ஆட்களை  அனுப்பி வைத்தனர் .

இதற்கு  முன்பே கூட  வந்தவனும்  காணமல்  போய்  விட்டான்  , எதற்கு வம்பு  என்றுதான் .


நண்பரின்  Phone  no  , அட்ரஸ்  எதுவும் வாங்க கூட இல்லை அவர்கள் .
அடிபட்டவரின்  மனைவி  வந்ததும் " நீங்கள்  போங்க  , அவங்க  பாமிலி  வந்துருச்சு  , நாங்க பாத்துக்கறோம் " என்று  நண்பரை  அனுப்பி  வைத்து  விட்டது .

அவர் வந்து  எனக்கு  இந்த சம்பவத்தை  சொன்னார்.
போலீஸ்  எந்த  ப்ரச்சனையும்  செய்ய  வில்லை என்றும் .

தேவை  இல்லாத  பயத்திலும்  , ஓட்டத்திலும்  ஒருத்தர்  உயிர்  போனாலும் பரவாயில்லை  , ஆனா  நாம எதுக்கு  இதில்  தலையிட  வேண்டும்  என்று  100
பேருக்கு  மேல்  சுற்றி  நின்று வேடிக்கை  பார்த்த  கும்பலை  என்ன சொல்ல.
நகர  வாழ்கையின் அவலம்.

ஒரு வேளை  , கேஸ்  பிரெச்சனை  ஆகி இருந்தாலும்  சென்று  கோர்ட்டில்  சாட்சி  சொல்லி வர  வேண்டும் தான். செய்து  தான்  ஆக வேண்டும் .
போன  உயிர் திரும்ப  வருமா??

வருத்தமும்  கோபமும்  தான்  எனக்கு  மிஞ்சியது .
ஹாஸ்பிடல்  ஏன்  இப்படி  இருக்கிறது  , மக்கள்  ஏன்  இப்படி  இருக்கின்றனர் .??
திருநெல்வேலி  போல  சின்ன டவுனில்  இது  கட்டாயம்  நடக்காது .
உதவிட  பாய்ந்து  வருவர். சக மனிதனை இப்படி விட்டு செல்ல மாட்டார்கள் .
இது  நகர மனிதர்களின்  எருமை  மாட்டு  மனம். ரத்த  மழை  கொட்டினாலும்  , துடைத்து  விட்டு  போகும் மனம்.

ஆட்டோ காரர்  குடும்பம்  அவரை  G .H  எடுத்து  சென்றார்கள் என்று  சொன்னார் . . நல்ல  படியாக  ஆகி  இருப்பார் என்று  நம்புகிறேன்.

இதே  போன்ற  ஒரு  ஆட்டோக்காரர்  தான் என்னையும் கண்டுகொள்ளாமல்  நடு ரோட்டில்  விட்டுதான்  சென்றார் .! என்ன  கொடுமை  சார்.
அதற்காக  உதவிடாமல்  இருந்திட  முடியுமா????? இதைக்கூட  செய்ய வில்லை  என்றால்  எதற்கு  இருக்கிறோம்.










Sunday, December 7, 2014

உங்களுக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்கா விட்டால் என்ன செய்வீர்கள் ???

உங்களுக்கு தீபாவளிக்கு ஊருக்கு  போக வேண்டும் என உள்ளது .
வேலை காரணமாக கடைசி  நாள் வரை  சரியாக  முடிவு  எடுக்க   முடியாமல் போகிறது .பின்பு  முன்தினம் முடிவு  செய்து ஊருக்கு போக  ஆசைப்படுகிறீர்கள் .ஆனால் எதிர்பார்த்தது போலவே டிக்கெட் சிரமம் ஆகிறது .சிரமத்தையும் தாண்டி கிடைக்காமலே  போகிறது .


நண்பர்களும்  இருவர் உங்களுடனே இதே  நிலைமையில் .
மிஞ்சி  மிஞ்சி  போனால் என்ன  செய்து  இருப்போம்
ஒரு புது  படம் பார்த்துட்டு  நல்லா  சாப்டு   தூங்கி இருப்போம்.

ஆனால் ,இந்த  நிகழ்வு சிலரின் வாழ்க்கையினை புரட்டிப்போட்டது .
எத்தனையோ சின்ன  சின்ன பஸ்  கம்பனிகள் இருக்குமே ,இந்த brokers தானே எல்லாத்தையும் பூந்து ரேட் ஏற்றி பிரெச்சனை செய்கிறார்கள் .

KPN போன்ற [போன்று  தான் !]  பெரிய  கம்பனிகள் தான் தனக்கென்ற website வைத்து  நடதுக்கின்றன .அப்போ  சின்ன  சின்ன  பஸ்  கம்பெனியில் ஒன்றோ  இரண்டோ  பஸ்  வைத்து  இருப்பவர்கள் என்ன  செய்கின்றனர் என்ற  கேள்வி
அவர்களுக்கு எழுந்தது .

இந்த  கேள்விக்கு விடைதான்  RED  BUS .இன்று  ஆன்லைனில் பஸ்  புக்கிங் வசதி  சின்ன  சின்ன  கம்பெனிகளுக்கும் உண்டு  என்பதும்  மட்டும்  அல்லாமல் , நம்மை போன்ற  பயணிகளுக்கு உக்கார்ந்த  இடத்தில்  ப்ரோகர்கள் இன்றி சரியான  நிர்ணயித்த  விலையில் பஸ்  டிக்கெட்கள்  கிடைக்கச்செய்த பெருமை  , ஆந்திராவைச் [ தெலுங்கானவோ!] சேர்ந்த
பனிந்திர  சாமா  , சுதாகர் , சரண்  என்ற மூன்று  நண்பர்களைச்  சேரும் .

மேற்சொன்ன  சம்பவம்  அவர்கள் வாழ்வில் நடந்தது .
இந்த  redbus ஐ  ஒரு  பெரிய  நிறுவனம் 600-700 கோடிகளுக்கு  acquire செய்துள்ளது  !  இப்படி  தீபாவளி டிக்கெட் கிடைக்காமல் போனது அவர்களுக்கு முன் வந்த  பிரெச்சனை .அதை படியாக மாற்றி  வாழ்வில் மேலே சென்று  விட்டனர் .

நமக்கும் வாழ்வில் இது  போன்று  சந்தர்ப்பங்கள்  வந்து  இருக்கும் .
யோசித்துப்பாருங்கள் .

எனக்கும் இப்படி ஒரு  சூழ்நிலை வந்தது .நான்  அதே  போன்ற ஒரு  தீபாவளிக்கு  சென்னை வந்தேன் .இரவு  முழுவதும் unreserved compartment இல் toilet வெளியே  நின்று  கொண்டே  வந்தேன்.முதுகு  வலியும்  தூக்கமின்மையும்  சேர்ந்து  படுத்தி  எடுத்தும் கூட எனக்கு  அது தோன்ற  வில்லை! சின்ன idea  தான்  , இறங்கி  செய்ய  மனமும்  தைரியமும் வேண்டும் .

இவர்கள்  நல்ல  சம்பளத்திற்கு  Texas  instruments  கம்பெனியில்    வேலை பார்த்தவர்கள் .முதலில்  பகுதி  நேரமாக  தொடங்கி  பின்பு  , என்னதான்  ஆகுதுன்னு  பார்த்துடுவோம் என்று  இறங்கி  ஜெயிச்சு  இருக்காங்க .


 உண்மையான ஒரு  chance  உம்   என்னை  தேடி வந்தது ஒரு முறை.
ஒரு  contact  என்னை  நம்பி  consulting  project கொடுப்பதாக  சொன்னார்கள் . நல்ல  கம்பெனிதான் .என நண்பன்  ஒருவனும்  இறங்கலாம்னு  என்றுதான்  சொன்னான் .கைமேல காசு , ஆனா  ஒரு வருடம்  கழித்து  guarantee  இல்லை  ,சூழ்நிலை  பொருத்து  அடுத்தது என்றார்கள் .
அந்த  நேரம் பார்த்து  என்னுடைய  கம்பெனி  வெளி  நாடு  ப்ராஜெக்ட் அனுப்புகிறேன்  என்று  சொல்லியது  .  entrepreneurship  ஆ  இல்லை, "safe  bet " ஆ  என்று பார்த்த  பொழுது  , நான்  இரண்டாவதை  எடுத்து  விட்டேன் .


இந்த guarantee  எதிர்பார்த்து  தான்  நாம் முன்னேரத்தயங்குகிறோம் பெரும்பாலும் .

முதலாவதை எடுத்து  இருந்தால் எப்படி இருக்கும் என்று  நிறைய  நாள்  எண்ணியதுண்டு .

வாழ்கை இப்படி சிக்ஸர் அடிக்க சான்ஸ் கொடுத்து பந்துகளை வீசிக்கொண்டு கொண்டு  தான் இருக்கிறது  .நாம் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் .
பீல்டர்களையும் நிறுத்தத்தான் செய்யும் ,ஈசியாக கொடுத்து  விடுமா என்ன.
மட்டய  சுழற்றி சிக்ஸர் அடிக்க நாம  தான் இறங்கி  அடிக்க வேண்டும்  தோனி  போல .

எப்படி முடிவு  எடுக்க என்ற குழப்பம்தான் நமக்கு எதிரி .சிக்ஸர்  அடிக்க முயற்சித்து  out  ஆவோமா  இல்லை பிரெச்சனை இல்லாமல் தரையோட  ஒரு four  அல்லது doubles  தட்டிட்டு இருந்துடுவோம்னு தான் பெரும்பாலும்  இருந்து  விடுகிறோம் .

சொல்ல வந்த காதல் எப்படி   டப்ப்புன்னு  சொல்லிடணும்ரதைப்  போல,இது போன்ற  முடிவுகளும் எடுக்கப்படனும் போல!


இன்னும் பேசுவோம் .










Tuesday, December 2, 2014

சிட்டுக்குருவி பார்த்தீர்களா ??

சிட்டுக்குருவி  பார்த்தீர்களா ??

சமூக வலைத்தளங்களிலும்  , ஊடகங்களிலும்  சிட்டுக்குருவி செல் போன் டவரினால்  பாதிக்கப்படுகிறது  என்று படிக்கிறோம் .

தண்ணீர்  இன்றி தவிக்கிறது என்றும் ..

தனித்தனியாக பார்த்தாலும் , மொத்தமாக  பார்த்தாலும்  காரணிகள்  மனிதனையே சுட்டிக்காட்டும் .

சமீபத்தில் என் சித்தாப்பா ஒரு செய்தியினை பகிர்ந்து  இருந்தார்கள் . வேடந்தாங்கலில் இந்த  வருடம் பறவை அவ்வளவாக காணவில்லை என்று . அக்கா  குடும்பம்  சென்ற வருடம் சென்று வந்து ஒரு அளவிற்கு பறவைககள் இருந்ததாக சொன்னார்கள் .ஆனால் நகரமயமாகுதல் வெகு தொலைவில் இல்லை என்றும் ....

.இந்த  concrete  jungle தனை அவை விரும்புதல் இல்லை தானே....உண்மையான  காட்டையும் நீர் நிலைதனைகளையுமே அவை விரும்பும் என்பதை யார் சொல்லியும் தெரிய  வேண்டாம். பிளாஸ்டிக் குப்பைகள் கண்டால் நமக்கே பிடிப்பது  இல்லை..கால்கள் உள்ள  நமக்கே அங்கு இருந்து வேகமாய் நடந்து கடந்து விட  மனம் ஏங்கும் ....ரெக்கை உள்ள  அவைகள்  இன்னொரு  இடம் பார்க்க கேக்கவா வேண்டும்....

திரும்பத்திரும்ப என்  பதிவுகளில் எங்கள் ஆதம்பாக்கம் பற்றி வந்து போய்க்கொண்டே  தான் இருக்கும்.எங்கள் area  என்பதால்  மட்டும்  இல்லை.
சென்னை  இல்லாத  ஒரு சென்னையாக  அது  இருந்ததாலேயே ...இப்பொழுதும் கொஞ்சம் .அகலமான பாதைகள் இல்லாததால் வேளச்சேரி  போன்று  வளர்ச்சி அடையவில்லை ...என்னை பொறுத்த வரையில் இது  நல்லதே .இன்னும் கொஞ்சம் புகை  குறைந்த காற்றை சுவாசிக்க முடிகிறது அங்கே ...நகரத்தின் இரைச்சலும்  கம்மியே ...அந்த  எரியும் இன்னும்  இருக்கிறது . touch  wood .

இந்த ப்பதிவில் ஆதம்பாக்கம் ஏன் வந்தது என்பது புரிந்திருக்கும் .
பறவைகளே  காரணம் .

முன்பெல்லாம் வீட்டினுள்ளே குருவிகள்  உண்டு .தாத்தாவின்  அறையில் கூடுகளும்  உண்டு . fan  மீது  இளைப்பாறி ,வாயில் வைக்கோல்  சுமத்துக் கொண்டு  பறந்தும் , ஜன்னல் கம்பிகளில் தவ்வியும் , அதன் கூட்டைக்கட்டியும்  அடைகாத்தும்  வந்த  அழகு ,காலம் கடந்தும் உறைந்து  நிற்கிறது மனதிலும் காலத்தின்  அழகியலிலும் .

ஜன்னல் வழி  இந்தபக்கம் பார்த்தால்  கரண்ட்  கம்பிகளில் தூக்கணாங்குருவி கூடுகள்  இருந்த காலமும் உண்டு.  compound   சுவர்  இல்லாத  காலத்தில் , செடிகளால் தான் நெய்யப்பட்டு இருக்கும் எங்கள் தடுப்புச்சுவர் .சின்ன  சின்ன  வெள்ளை  நிறத்தில் அழகான பறவை முட்டைகளை  நானும்  பார்த்து உள்ளேன் ...அதன்  அம்மா அப்பா நாங்கள்  இருந்தால்
சில அடிகள் தள்ளி காத்துக்கொண்டு  இருக்கும்.மனித  வாசம் படாமல்
இருக்க வேண்டும்  என்று என் அம்மா அப்பா சொல்வதுண்டு. அதனால் தொட மனம்  இருந்தது  இல்லை....அந்தச்ச்சணம் அப்படியே மின்னிப்போகிறது இதை type  செய்துக்கொண்டு  இருக்கும்  பொழுது கூட .

குண்டு  குண்டான  செவந்த  இட்லிப்பூவில்   zzzzzzzz  என்ற சத்தத்துடன் ரீங்காரம்  இட்டுக்கொண்டே ஹெலிகாப்ட்டர்  போல ஒரே இடத்தில தேன் பருகும்   தேன்சிட்டு இருந்த காற்றின் தடம்  எங்கே  இப்போது ?

வீட்டின்  பின்  புறம் ஏரியின் மிகப்பக்கம் ....
அடிக்கடி ஏரித்தண்ணி வீட்டினுள்  வரும் ,மழைக்கலாங்களில்  சொன்னேன் .
வீட்டின் wash  basin  இருக்கும்  இடத்தில்  இருந்து  பூ  போட்ட  ஜாலி வழியாக பார்த்தால் , மீன்  பிடித்துக்கொண்டு  இருக்கும்  king  fisher  பறவை.
இப்போதெலாம்  " king  fisher  " பீர்  விளம்பரத்தில் தான்  அந்தப்பேரை கேட்டுக்கொள்ள  வேண்டியுள்ளது .எங்கப் பார்க்க ?கூகுளில் தேடி  வைக்கிறேன் .

காலையில் சீக்கிரம் எழாத   நான்  சீக்கிரம்  எழும்  காலமும்  இருந்தது  ஒரு
சீசனில் . நீண்டு  உயர்ந்த அகத்திக்கீரை மரத்தின் பூக்களை அழகாக சுவைத்துத்  துப்பிப்  போடும் அழகை பார்க்க எழுந்த  காலம் .
இதைத் தவிர  இன்னும்  பெயர்  சொல்லத்தெரியாத  நிறைய ப்பறவைகள்  உண்டு. ஆதம்பாக்கம்  எரி  ஒரு சிறிய  வேடந்தாங்கலாக இருந்து  இருக்கலாம், இப்பொழுது  இல்லை.

வீட்டின்  முகவரி " physical  address " மட்டும்  குரியிடுவதில்லை  . நினைவுகளும் தான்  பெரும்பாலும் .இந்தப்பறவைகளை   நான்  பார்த்து  நிறைய நிறைய   வருடங்கள்  ஆகிறது .  இவை  இல்லாமல் எங்கள்  வீடு தன்  அடையாளத்தை கொஞ்சம் தொலைத்துதான்   இருக்கிறது . இந்தப்பதிவின்  மூலம்  கொஞ்சம்
அதை நிரப்பி  விட்டு வந்தேன், நினைப்பில்  வாயிலாக .

பறவைகளே  மீண்டும்  வாருங்கள்.....