சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் வசந்தின் " Rhythm " படத்தினை மீண்டும் பார்த்தேன் . செல்லுலாய்டில் ஒரு கவிதை அந்தப்படம் என்று சொன்னால் மிகையாகாது .
ஆனால் இந்தப்பதிவு படத்தைப்பற்றி அன்று.
படத்தின் நாயகன் " action king " அர்ஜுன் பற்றி.
அர்ஜுனின் சார்ஜாவின் ," mellowed down subtle " நடிப்பினை நாம் எத்தனை முறை கவனித்து இருப்போம் என்று தெரியவில்லை. அந்த "விடோவேர்" பாத்திரத்திலும் "bomb squad " மற்றும் " journalist " பாத்திரத்திலும் பன்முகம் கொண்ட நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார் . , "action king" என்ற பெயர் அதனை நம்மை சரியாக கவனிக்க வைக்காமல் கூட செய்து இருக்கலாம் .
டைரக்டர் வசந்திற்கு ஒரு சலாம் இந்த பாத்திரத்துக்கு அர்ஜுனை தேர்வு செய்தமைக்கும் , நடிக்க வைத்தமைக்கும் .
"gentleman" படத்தில் கிச்சா கேரக்டர் , ...
வெளியே சாந்தமும் , உள்ளே ஒரு எரிமலையின் சூட்டையும் சுமந்துக்கொள்ளும் அந்த பாத்திரம் , என்றைக்கும் மனதில் விட்டு விலகாது.இப்பொழுது என்னால் வேற யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை " கிச்சா" வாக .
சமயங்களில் ஒரு கதைக்கு இதை விட அதிகமான "star value " கொண்ட ஒரு நடிகனை அணுகி , ஏதோ காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லப்பட்டு , பின்பு அர்ஜுனுக்கு சென்றதாக படித்து உள்ளேன் .அல்லது ஒரு படத்திற்கு ரொம்ப நாட்கள் [ gentleman ,முதல்வன் ] செலவிட வேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்படும் பொழுது , அர்ஜுன் அந்த சவாலுக்கு தயாராகி நடித்து இருப்பதாக நினைக்கிறேன் .
கொஞ்சம் கன்னடம் வாசனை கலந்த தமிழ் பேசினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கத்தான் செய்யுது.
ஒரு சம்பவம் நியாபகம் வருகிறது , படத்திற்கு வெளியே.
நான் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தில் , கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்ட பிரகாஷம் என்னுடன் ஒரு நாள் மதிய வேளையில் பேசிக்கொண்டு இருந்தார். சினிமாவில் எனக்கு எந்த நடிகரின் "dancing style " பிடிக்கும் என்று கேட்டார். விஜய் தான் என்று சொன்னதாக நியாபகம்.
அவர் சொன்னது அர்ஜுன் ! என்னை சற்று கூர்மையாக பார்கச்சொன்னார் .
அப்பொழுது மறந்த நான் , சமீபத்தில் " காற்றே என் வாசல் வந்தாய் " பாட்டில் அதனை கவனித்தேன். அர்ஜுனுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கத்தான் செய்கிறது.
கடைசியாக , என்னுடைய " all time favorite " படங்களில் , முதல் பத்திற்குள் எப்பொழுதும் மாறாத "குருதிப்புனல் " படத்தில் , வேகமும், நேர்மையும் , கோபமும் ஒன்றுசேர தேவைப்பட்ட " அப்பாஸ் " பாத்திரத்தில் நடித்ததில் , அதே பாத்திரத்தை , "drohkaal " ஹிந்தி படத்தில் செய்த " Legend nasaruddin shah " வைக்காட்டிலும் அந்த பாத்திரத்தில் அர்ஜுனே பிரகாசம் செய்தார் என்பது என் கருத்து. நேரம் இருந்தால் " drohkaal " பாருங்கள் தெரியும்.
No comments:
Post a Comment