Friday, October 13, 2017

சிறுகதை : புலப்படுதலுக்கு அப்பால் [நிறைவுப் பகுதி ]


இதுல  இந்த  சம்பளம்  இல்லாத  இந்த  வேலைய  விட்டுப்  போனபோது  பிரெண்ட்ஸை  நினைத்துதான்  இன்னும்  வருத்தம் ...ஊருக்கு  திரும்பி  பஸ்ல போறப்போ கூட அதைத்தான்  நினைச்சுட்டே  போனேன் .
நான்  சொன்ன  போல  , நான்  காலேஜ்  டேஸ்ல  கம்ப்யூட்டர்  எல்லாம்  படிக்கலை ...அதுல  நான்  கம்ப்யூட்டர்  instructor  வேலைக்கு  போனது  எப்படினு  உனக்குத் தோணியிருக்கும் ..
அன்னைக்கு  கிளாஸ்  என்ன  எடுக்கணும்னு  எனக்கு  ரூம்ல  பிரெண்ட்ஸ்  கோச்சிங்  பண்ணி  அனுப்பிடுவாங்க ..அப்புறம்  சி நா  என்ன  , சி + + பிளஸ் நா  என்ன    ,  z  + + வரைக்கும் !  ஒரு  வழி  பார்த்தாச்சு . ஊருக்குத்  திரும்பிப்போகும்  போகும்  போதும்  கூட  ,  பிரெண்ட்ஸ்  பின்னாடி  இருக்காங்கங்கற  நம்பிக்கை  கூட  இருந்ததால  ரொம்ப ஹோப்  எல்லாம்  இழக்கல..

ஆனால்  , சினிமாவில்  பாட்டு  பாட  வேண்டும்ங்கிற கனவு  கொஞ்சம்  மாசம் முதலில்  இருந்தது  , சம்பாதிக்காம எத்தனை  மாசம்  இருக்கன்னு  , அதையும்  சேர்த்து  புதைச்சுட்டே  ஊருக்குத்  திரும்பிப்போனேன் ..அந்த  வலி  போகல  எப்போதும் ......

"யார்  யாரோ  பாடறாங்கட ....உன் குரலுக்கு  எல்லாம்  கட்டாயம்  சான்ஸ்  கிடைச்சு இருக்கணும் ..சரி  விடு .. எனக்குத்  தெரிந்து  உன்  குரலின்  ஸ்கேலை  நீ  முழுசா  explore  செய்யலைன்னுதான்  சொல்லுவேன் ... அழகிய  லைலாவோட  குதூகலம்  கொடுக்கக்கூடிய  உன்குரல்  ,  சமீபத்தில்  நீ
"நிற்பதுவே  நடப்பதுவே  " பாடினப்போதுதான் முக்கால்  ரவுண்டு வந்திருக்குன்னு  சொல்லுவேன் ...இன்னும்  நிறைய  போகலாம் ..குறிப்பா  அருண்மொழினு  ஒரு  சிங்கர்  இருக்காரு  , அவரோட  பாட்டு  உனக்கு  நல்ல  செட்  ஆகும் ....அடுத்த  முறை வர்ற போது  , " இனி  நான்  என்பது  நீ  அல்லவோ  தேவ  தேவா " , அந்தப்பாட்டை  நீ  பிராக்டிஸ்  செஞ்சுட்டு  வா ..இதே  மலையில்  , இந்த  மான்  , அணில்  கேக்க  நாம  ரெகார்ட்  பண்றோம்  ..சரியா ???"


என்னமோ  சொல்ற  போ .. இப்போல்லாம்  நான்  பஜன்ஸ்  பாடறதோட  சரி ...என்  wife க்கு  கூட  நான்  இவ்ளோ  பாடுவேன்னு  தெரியாது ...

நீ  அனுமார்டா  உன்  பவர்  எனக்குத் தெரியல  அவ்ளோதான்!


மேலே  போகும்  பாதைகள்  பிரிந்தன  , எங்கேபோகலாம்  என்று  முடிவெடுக்க  கடிகாரத்தைப் பார்த்தேன் ...கால  பகவான்  வழி காட்டினான் .
இந்த  வழியில்  போவோம்  , உனக்கு  return  பிளைட்டுக்கு  டைம்  ஆகிட்டு  இருக்கு . இன்னும்  ரெண்டு  நாள்  இருக்கிறபோல  வந்து  இருக்கணும்  நீ ...

காலபகவான்  நண்பனுக்கு  வழிகாட்டியிருக்கிறான் ....
அந்தப்பாதை பிடித்து  மேலே  போகையில்  , அவனுடைய  வாழ்க்கைப் பாதையின்  அடுத்தபடியினில் என்ன  நடந்தது  எனக்கேட்க  ஆவலாயிருந்தது ....

ஊருக்குபோயாச்சு .....அப்புறம்  அங்கேயிருந்து ,   சரி  சென்னை  பார்த்தாச்சு  , இப்போ  பெங்களூர்  போய்   ட்ரை பண்ணுவோம்னு   குமார்  வீட்டுக்கு  போனேன் . அங்கேயும்  தேடிட்டு  ஒன்னும்  கிடைக்காம  திரும்ப  ஊருக்கே  போய்ட்டேன் .

குமார்   , நான்  ,  அப்புறம்  உனக்குத் தெரியாத இன்னொரு  பிரெண்ட்  மூணு  பேரும்  ஊர்ல  லாங்  டைம்  பிரெண்ட்ஸ் ... வாழ்க்கைல  நான்  எப்போலாம்  கஷ்டத்திலோ  , குழப்பதிலோ  , தப்பான  ட்ராக்  எடுக்கும்  போதும்  , குமார்   வந்துடுவான் ...இந்த  முறை  அந்த  இன்னொரு  பிரெண்ட் ..அவன்  ஆட்டோ  ஓட்டுறான்  எங்க ஊருல ...
ஒரு  நாள்   , " டேய்  ஆட்டோல  போறப்போ  ,ஒரு  சேட்டு  நாக்பூரில் இருந்து  வந்து நம்ம  ஊரில்  ரோடு  போட்டுட்டு  இருக்காண்டா .நீயேன்   வெளியூரில்  போய்  தேடுற  , இங்கேயே   ட்ரை  பண்ணவேண்டிதானே "  எனக்கேட்டான் .

இது  என்னோட  core  துறை . construction .  சரி  சாப்ட்வேர் சரியா வரலை  , இதை  ட்ரை  பண்ணிப்பார்ப்போம்னு  போய்  அப்ளை  பண்ணினேன் .
பாலசுப்ரமணியன்னு  ஒருத்தர்  தான்  அங்கே மேனேஜர் . மறக்கவே  முடியாது  அந்த  நாளை.

" எவ்ளோ  பா  சம்பளம்  எதிர்பார்க்குற ?

" ஒரு  4000 சார் "

" ஹ்ம்ம் ...நீ தங்கற  இடம்  கேக்கல  , உள்ளூர்  பய்யன் ...ஹொவ் அபௌட்  4500 " என்றார் ....

வாழ்க்கைல  இப்படி  நல்ல  மனிதர்கள்  அங்க  அங்க  இருக்கத்தான்  செய்யறாங்க . காலேஜ்ல  படிக்காத  எல்லா  வித்தையும்  அந்தக்  கம்பெனில தான்  ப்ராக்டிகலா  படிச்சேன் . மறக்க  முடியாத  ஒரு  வருஷம்னு  சொல்லுவேன் . வீட்டுக்கு  சாப்பிட  வந்துடுவேன் . இப்போ  அவ்ளோ  earn  பண்ணாலும்  , அப்போ  கிடைச்ச  அந்த  4500 உம்  , வீடு  சாப்பிடும்  மனசுல  அப்படியே  இருக்கு .

இப்படி  போயிட்டு  இருக்குறப்போ  , பேப்பர்ல  புனேவில்   ஒரு  கம்பெனில  இன்னும்  நல்ல  சம்பளத்துக்கு  ஒரு  வேலை  பார்த்து  அப்ளை  செய்யறேன் .
10000 க்கு  வருது . அண்ணன்  ஒரு  army  soldier . அவனோட  trunk  பேட்டி  ஒண்ணுல  , என்னோட  சாமான  சுருட்டிட்டு  ஊருக்கு  பை  சொல்லிட்டு  , புனே  போய்  இறங்குறேன் ..அங்க போனப்பறம்தான்  தெரியுது  , வேலை  புனேவில்  இல்லை ...அங்கேயிருந்து  கொஞ்சம்  தள்ளி  , இன்டர்நெட்  கூட  இல்லாத  ஒரு  கிராமம்னு . ஆனா  தங்க  இடம்  கொடுத்தாலே  , சேவிங்ஸ்  அதிகம் .

இப்படியே  இருந்துட  முடியாதுன்னு  , மேலே  கெரஸில்  ஏதாவது  படிப்போன்னு  தோணுச்சு .....அப்போ  எனக்குத்  தெரியாது  என்  வாழ்க்கை
வேற  இடத்துக்கு போகப் போகுதுன்னு ..நாடு விட்டு  நாடு  கடக்கப்போ குதுன்னு ....

பேசிக்கொண்டிருக்கையில  ஒரு  காய்ந்துச்சாய்ந்திருந்த  மரமொன்றைப்  பார்க்கிறோம் . வேர்கள்  மண்ணோடு  துறுத்திக்கொண்டிருந்தது இன்னும்.
சமீபத்தில் பெய்த  மழையின் சீற்றத்தில் மண்ணரிப்பில் விழுந்திருக்கக்கூடும் . அதன் கீழும்  ஒரு  மெல்லிய  ஓடையொன்று  ஓடிக்கொண்டுரிந்தது .

" எவ்ளோ  மரம்  இங்கே ...நம்ம  ஊரில்  இப்படி  விட்டுவைக்க மாட்டேங்கறாங்களே ...."

" ஆமாம் ..அதுவும்  இந்த  மலை  கமர்ஷியல்  ஏரியாக்கு  ரொம்ப  பக்கத்துல தான்  இருக்கு . நம்ம  ஊரா  இருந்தா  , ஹில்  வியூ  ஹோம்ஸ்ன்னு  போட்டு  , அதிக  ரேட்டுக்கு  வித்துருப்பானுங்க ..."

" சரியாச்சொன்ன ..என்னத்த  சொல்றது..எனக்கு  மரம்னா  ரொம்பப்பி டிக்கும் ... ஒரு  போட்டோ எடுத்துக்கறேன்  இந்த  மரத்து  மேலே  உக்காந்து ...எங்க  ஊரு  மரம்  நியாபகம்  வந்துடுச்சு ...இது  போல  புயலுல  விழுந்த  மரத்தை  வீடு  பக்கத்துல  பார்த்து  இருக்கேன் ..

இன்னொன்னுடா   ,  என்னோட  பசங்களோட
பர்த்டே  எல்லாம் , பெருசா  கொண்டாடறதில்ல  , அவங்க  வயசு  அஞ்சாச்சுன்னா  , அஞ்சு  மரக்கண்ணு  நடவைக்கறேன் ... இப்படி  வயசு  ஏற  ஏற  அதிக  மரங்க .முடிஞ்சவரை  ஊருக்கு போகும்போது  அதை  அவங்க கையாலயே  நடச்சொல்வேன் .
சொன்னா  ஆச்சரியமாயிருக்கும்  உனக்கு  , அந்தச்செடியை ,   ஒவ்வொரு  தடவை  இந்தியா  வரும்போதும்  ,அவங்க  அதைப் போய்ப்  பார்ப்பானுங்க .
அப்பா  , நான் போன  வருஷம்  இவனை  விட  உயரமா  இருந்தேன்  , இப்போ இவன்  வேகமா  வளந்துட்டான்னு  என்கிட்டே  சொல்லி சந்தோஷப்படறாங்க " என்றான் .

நல்ல  பழக்கம்டா ....நானும்  ட்ரை  பண்றேன் .
சரி  புனேயில்  மேல்படிப்பு  படித்த  கதையிலிருந்து  மேலே  சொல்லு .

" அந்த  கோர்ஸ்  நான்  லோன்நினேஸ்  மறக்க  படிக்க  ஆரம்பிச்சேன்னு  கூட  சொல்லுவேன் . ஆனா  போகப்  போகப் பிடிச்சு  போச்சு .ரசிச்சு  செஞ்சேன்  , ப்ரொஜெக்ட்ஸ்  சப்மிட்  பண்ணேன் .

அப்புறமா  நைஜீரியா  நாட்டில்  வேலையோன்னு
பேப்பர்ல  பார்த்தேன் ...அங்க  இந்த  லீகல் அட்வைசர்  , ப்ராஜக்ட்  பாதியில  விட்டுட்டு  போய்ட்டதால   , அவசரமா  ஆள்  தேவப்பட்டதுன்னு  இந்தியால  நல்ல  ரிசோர்ஸ் எதிர்பார்த்து விளம்பரம்  கொடுத்திருந்தாங்க ..நானும்  நான்  படிச்ச கரெஸ்பாண்டன்ஸ் வச்சு  ஒரு  கல்லு விட்டுப்பார்ப்போம்னு  விட்டேன். அது  எப்படியோ  கிளிக்  ஆகி   , நான்  ஒரு  ஒன்பது  வருஷம்  அங்கேயே  இருந்துட்டேன் ...இதுல  அங்க  கிளம்பரத்துக்குள்ள  மேரேஜும் பிக்ஸ்  ஆகிடுச்சு .. அப்புறம்  கம்பெனில  மல்டி  மில்லியன் டாலர்  கான்ட்ராக்ட்ஸ்  பாக்கற  அளவுக்கு  என்னை  நம்பிக்கொடுத்தாங்க ..
அப்புறம்  அங்கே  இருந்து வேற  நாட்டுக்கு  போய்ட்டேன் .. அப்படியே  வாழ்க்கை  போயிட்டு  இருக்குன்னு "  சொன்னான் .


இரு  இரு இரு ...வேகமா  நடந்து  வந்ததை  விட  உன்கதை  மூச்சுவாங்க  வைக்குது ...எவ்ளோ  coolaa  சொல்லிட்ட  நீ ...எவ்ளோ பெரிய  பயணம் இது ..
உன்  உழைப்பும்  , விடாமுயற்சியும் எவ்ளோன்னு  கொஞ்சம்  யோசிச்சு  ஜீரணிக்க  டைம்  கொடுன்னு  சொல்லிட்டு  நானும்  கொஞ்சம்  உட்கார்ந்தேன் ...

அப்புறம்ம லை  உச்சிக்கு  வந்துவிட்டோம் ... மேலே  இருந்து  பார்க்கையில் , நகரம்  இன்னும்  அழகாகத்  தெரிந்தது . தீப்பெட்டி  தீப்பெட்டியா  வீடுகள்  தெரிந்தன ...சிலிக்கான்  வாலி  , உலகத்தின்  தலைசிறந்த  நிறுவனங்களின்   கொள்ளிடம் ..இங்கிருந்து  பார்க்கையில்  அந்த  பரப்பரப்பின்றி  அமைதியாக .....மிக அமைதியாக ...காலில்  வெந்நீர்  ஊற்றினாற்போல  ஓடிக்கொண்டிருக்கும்  மனிதர்கள்  அடங்கிய  இடத்தையா  பார்த்துக்கொண்டிருக்கிறோம்  இப்ப ?  இதை  முதல்  முறை  நான்  பார்க்கவில்லை ...இருந்தாலும்  ஒவ்வொரு  முறை பார்க்கும்  பொழுதும்  அந்த  வியப்பு  அகலவில்லை ...

சூப்பர்டா  .....வென்று  நண்பன்  கூப்பிட்டபின்தான்  எண்ண  அலைகளிலிருந்து  வெளியே  வந்தேன் ....அட , மலையில்  எங்கே  அலைகள்   என்று சிரித்துக்கொண்டேன் ...சரி  இருந்துவிட்டுப்போகட்டுமே   கற்பனையா ...கீழே  இறங்கிப்போனபின்  , நகர  இரைச்சலில்  இப்படி  சிலாகித்து  வாழும்  தருணங்கள்  கம்மிதானே ...

நண்பனும்  , rewind  உலகத்திலிருந்து  வெளியே  வந்து  , அந்த  அமைதியான  காட்சியினைப்  பார்த்துக்கொண்டேயிருந்தான் ..இந்த  கொஞ்சம்  ஆப்பிள்  சாப்பிடு  , சிலிகான்  வேலி  வந்துட்டு  , " ஆப்பிள்  " சாப்டிலைன்னா  எப்படின்னு  சிரித்தேன் ..

மலை  உச்சியில்  ஒரு  புகைப்படம்  எடுத்துக்கொண்டோம் ...

ரொம்ப  சரியான  இடத்துக்கு  என்னை  கூட்டிட்டு  வந்தடா ...மால்ஸ் பார்த்து போர்  அடிச்சுடுச்சு .....

"IT WAS REALLY GOOD TO BE IN A REAL JUNGLE INSTEAD OF CORPORATE JUNGLE..."

my pleasure டா .  எனக்குத்தெரியும்  உனக்கு  இதுதான்  பிடிக்கும்னு ...

சரி  நேரமாச்சு  இந்த  இடம்  ஒரு  மாய  வலை .....நேரத்தை  விழுங்கிடும் ஒரு  black  hole  போல ...கிளம்புவோம் ....flightku  நேரமாச்சு....


கீழே  இறங்குகையில்   ஓடிக்கொண்டே  பேசிக்கொண்டு  வந்தோம் ..


டேய்  இவ்ளோ  பெரிய  உன்  பயணத்தில்  ,  எனக்கு  ஒண்ணே  ஒண்ணுதான் .
மனசுல  சுத்தி  சுத்தி  வந்தது ....மத்த  விஷயம்  எல்லாம்  ஓகே..உன்  ஹார்ட் வொர்க்  ...சரியான  நேரத்துல  சரியான  துறையை  நீ  தேர்ந்து  எடுத்து ..சவுகரியம்  பாக்காம  ஊர்  ஊரா  போனது   , குறிப்பா  உன்னோட  people  skills  உன்னோட  சொத்துன்னு  எனக்குத்தெரியும்  ...இது  எல்லாம்தான்  உன்னோட  வெற்றிக்கு  காரணம் ..ஆனா  என்னோட  லாஜிக்கல்   மைண்டுக்கு  ஒண்ணே  ஒண்ணுதான்  இடிடுக்குது ...

அது  உன்னோட  முதல்  வேலை ..திட்டத்திட்ட  ஒரு  வருஷம்  வேலை  இல்லாம  இருந்துட்டு  , அப்புறமா உனக்கு  உன்  ஊரில்  உனக்கு  வேலை  கிடைச்ச  விதம் ...ஆட்டோ  ஓட்டும்  உன் பிரெண்ட்  , எதேச்சையாக அவருடைய  தினச்சவாரியில்  , ஒரு  சிவில்  கம்பெனிய  பார்த்துட்டு  , அதுவும்  அந்தக் கம்பெனி மானேஜரை உங்க  ஊரு  ரயில்வே  ஸ்டேஷன்ல  இருந்து  , அந்தச்  சந்தில்  இருந்த  சின்ன  கம்பெனி  ஆபிசுக்கு  கொண்டு  விட்டப்போ  பாத்துட்டு  , உனக்கு  அதைச்சொல்லி  , நீயும்  அதை  நம்பி  அப்ளை  பண்ணி  , இப்போ இங்கே  வந்து  நிக்கற ...வாழ்க்கை  இப்படி  எல்லாம்  விளையாடுமா ?  !

" ஆமாம்  டா ....கடவுள் அருள்  " என்றான்

அவ்ளோதானா ....வேற  ஒண்ணும்  சொல்லத்தோணலையா  உனக்கு ?

" அவ்ளோதான்டா .."

கீழே  இறங்கி  வந்தாயிற்று ...  எப்பொழுதும்  வெற்றி  பெற்றவர்களின்  சூட்சமத்தை  பிரித்து மேய்வேன்  நான் .. இவனுடைய  கதையில்  எங்கேயோ   ஒண்ணு  இடிக்குது ..இன்னும்  ஒரு முக்கியமான  வெற்றியின்  மூலப்பொருள்
 [ success ingredient ] மிஸ்  ஆகுதுன்னு  மனசு  சொல்லிட்டே  இருந்தது ... சரியாகப்  புலப்படவில்லையே  என்று குழப்பத்திலேயே  உழன்றது ...

காரில்  எறியாச்சு ....

" டேய்  , ரொம்ப  சந்தோசம்  டா  ,I had a really great time...
போட்டோஸ்  என்  கேமரால இருக்கு ..ஊருக்கு  போய்  அனுப்பறேன் ..
ஆனா  ஓண்ணுடா ...இதை  சோசியல்  மீடியால  போட்டுடாத ...
நான்  foreign  ட்ரிப்ஸ்  இல்லை  ரொம்ப  என்சாய்  பண்ண  படங்களை  போடறது  இல்லை ...நமக்கு  கிடைச்சது  , அவங்களுக்கு  அமையலையேன்னு  யாரும்  ஏங்கிட கூடாது ... NOTHING ELSE ..நான்  அதுல  ரொம்ப   ஜாக்கிரதையா  இருப்பேன் "

SURE ...

காரை  ஸ்டார்ட்  பண்ணும்  போது  நண்பனை  ஒரு  முறை  பார்த்தேன் ..
 நான்  தேடிக்கொண்டிருந்த  அந்த  மிஸ்ஸிங்  ingredient  அவன்  மேல  சொன்ன  அவன்  மனசுதான்  என்று  என்  அறிவும்  சேர்ந்து   ஊர்ஜிதப்படுத்தியது ......

------- அவன்  வாழ்க்கைப்பயணம்  நிஜத்தில்  தொடரும் ..கதை  இங்கே  நிறைவு  பெறுகிறது .....சுபம் !





2 comments: