Sunday, October 8, 2017

சிறுகதை : புலப்படுதலுக்கு அப்பால் [ அத்தியாயம் ஒன்று ]

அத்தியாயம் ஒன்று ..

பதினேழு  வருடங்களுக்கு  மேல்  ஆகிறது  அந்த நண்பனைப்  பார்த்து . கல்லூரியில்  முதலாமாண்டு ஒன்றாகப்படிதிப்பின்  , அவன்  வேறு துறைக்குப்  போய்விட்டான் . முதலாமாண்டு  அடுத்த  அறையில்  தங்கியிருந்த  நாட்கள் நினைவுக் கதவுகளை  வந்து தட்டிப்போயின,  அவன்  நான்  இருக்கும்  நாட்டிற்கு  , ஊரிற்கு வரப்போகிறான்  எனக் கேள்விப்பட்டதும் . சிலரிடம்  ஒரு  சக்தி  உண்டு  , பழுகுபவரெல்லாம்  , வெகு சீக்கிரத்தில்  ரொம்ப  நாட்களாக  பழகியது  உணரவைக்கக்கூடிய  ஒரு  நுட்பம் ..

இவனுக்கு  அது  அதிமாகவே  உண்டு .ஆனால்  என்  இரண்டு வயது  மகளும்  , அவன்  காலணி  மாட்டும்  பொழுது  , பின்புறம்  அவன் தோழில் சாய்ந்தது  நாள்  கொஞ்சமும்  எதிர்பாராதது .புகைப்படம்  பிடிக்கலாம் என  நினைக்கையில்  , இல்லை  இது  அப்படியே  நினைவில்  மட்டும்  இருந்து  விட்டுப்  போகட்டுமே  என விட்டுவிட்டேன் .

இரவு  உணவு  முடிந்து  அவன்  கண்கள்  சொக்கிக்கொண்டு  இருப்பதைப்  பார்க்கிறேன்  , அவனுக்கும்  தூங்க  மனமில்லை  , எனக்கும்  இல்லை..என்னன்னவோ  கதைகள்  பேசினோம்  . விடிகாலையில்  அருகில்  இருக்கும்  ஒரு  சிறிய  மலைக்கு  , மலையேற்றம்  [ hiking ] போவோமென திட்டமிட்டிருந்தோம் , அனால் , மூன்று  முறை  , " சரி  நீ  படு " எனச்சொல்லி  விட்டு வந்த  பின்னும்  , பேசி  பேசி  கழிந்த  இரவு  இழுத்து  விட்டது .

காலையில்  , இருப்பினும்  ஒரு  அளவிற்கு  சீக்கிரம்  கிளம்பி  விட்டோம் .
மலை  அடிவாரம்  வரும்  வரை  , அவனுக்கு   என்ன  பார்க்கப்  போகிறோம்  எனச்சரியாகத்  தெரியாததால் , எங்கே   போகப்போகிறோம்  என்றுப்  பெரிய  ஆவல்  இன்றி வந்ததாக எனக்குப்பட்டது .

ஆனால்  இரண்டவது  நிமிடத்தில்  பரவசமானான்  .  அங்கே  இரண்டு  இளங்கருப்பு  மான்கள் அவனை  வரவேற்றதே  காரணம் . அதனுடன்  புகைப்படம்  எடுத்துக்கொண்டான் . இன்னும்  கொஞ்சம்  ஏறினோம் .
நகரத்தின்  ஒரு  பக்கம்  நன்றாகத் தெரிந்தது  சற்று  உயரத்தில்  இருந்து . அமைதியாக  அதையே  பார்த்துக்கொண்டு  இருந்தான் . நானும்தான் .

----------- காட்சி  2.

வெளிச்சம்  மரங்களின்  கிளைகளுக்கிடையே  குவியத்தொடங்கியது  ,  சூரியன்  ஒரு  பெரிய  மரத்தின்  கிளைகளுக்கிடையே சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க  முடிந்தது . அதன்  பின்  அவனை  அங்கேயே  விட்டுவிட்டு  வனதேவனை  தரிசிக்க  இன்னும்  உள்ளே  பயணித்தோம் . ஒரு  சிறிய  மரப்பாலம்  வந்தது  , அதன்  மீது  ஏறி  , கீழே  ஓடியே  சின்ன  ஓடையின்  சத்தம்  ரம்மியாக  இசைத்துக்கொண்டே இருந்ததைக்  கேட்க  முடிந்தது .

" இப்படி  ஒரு  இடம்  எங்கள்  ஊரில்  இருந்தால்  , நான்  தினமும்  காலையில்  வந்து  விடுவேன் . நீ வாரா  வாரம் வந்துடுவியா ? " இது  அவன் சொன்னது .

" வரணும்னு  ஆசைதான் , அனால்  வேலை  அதிகம்  , மாசம்  ஒரு  தடவை  வர  ட்ரை  பண்ணிட்டு   இருக்கேன் ".

அந்த  மரங்களினூடே  நடக்கையில்  ,தூய்மையான  oxygen  காற்று  நுரையீரலை  சுத்தப்படுத்தியதை
உணர முடிந்தது அதுவரை . ஒரு  சொல்லத்தெரியாத   போதை  அது  , சுத்தக்காற்றின்  போதை ....
கண்கள்  மூடி  சுகிக்க  வேண்டிய  போதை ....

ஒரு வளைவைத்தாண்டி  மேலே  ஏறிக்கொண்டு  இருக்கிறோம்  இப்பொழுது . மரங்களின்  தலைகள்  ஒரு பெரிய  பச்சை  நிலப்பரப்பை  சுமத்துக்கொண்டு  இருந்தது  அங்கிருந்து  பார்க்கையில் .

அந்தச்சனத்தில் கொஞ்சம்  மூச்சு  நின்றுப்போனாற்போல  உணர்ந்தேன் . அவனைப்பார்த்தாலும்  அப்படிதான்  தோன்றியது  .அந்தக்காட்சியின்  பிரமிப்பு அப்படிதான் செய்தது உள்ளூர .

"உனக்கு  இருக்க  ஸ்டாமினாக்கு  , இப்படி  மூச்சு  திணறினாதான்  உண்டு  என்றேன் . சிரித்துக்கொண்டான் .

" ஆமாம்  , உடம்பு  ரொம்ப  முக்கியம்  , நான்  8 மணி நேரத்திற்கு  மேலே  ஆபீஸ்  வேலை  பாக்கறது  இல்லை .
மேலே  மேலே  மேலே  போகணும்னு  என்கூட  இருக்கறவங்க  இன்னும்  அதிகமா  ஓடிட்டு  இருக்காங்க  , நான்  காலைல  உடம்புக்கு  ஓடறதோட  சரி! " என்று  நமட்டுச்  சிரிப்புச்  சிரித்தான் .

" நீ  சொல்றது  போல  , மேலே  போறதுக்கு  மட்டும் இல்ல...சர்வைவலுக்கே  ஓடத்தான்  வேண்டி  உள்ளது . எக்ஸ்பீரியன்ஸ்   அதிகமானா  எதிர்பார்ப்பும்  அதிமாகத்தான் செய்கிறது .  ஆனால்  நீ சொல்றதிலும்  உண்மை  இருக்கத்தான்  செய்யுது . நானும்  கொஞ்சம்  கூல்  டவுன்  பண்ற  பிளானில்தான்  இருக்கேன் ..."

இப்படி  பேசிக்கொண்டிருப்பதை  கேட்டுக்கொண்டிருந்த  வனதேவதைக்கு  அலுப்புத்தட்டியிருக்க  வேண்டும்  போல . முட்டாள்  மனிதர்களே  , இங்கே வந்தும்  உங்கள்  நகர வாழ்க்கை  புலம்பலை  பேசி  , இந்தக்காற்றின்  வாசனைய  கெடுக்காதீங்கவென்று  சொல்வதுபோல  , அந்த  புதரிலிருந்து  ஒரு  சலசலப்பை  ஏற்படுத்தினாள் . கொஞ்சம்  நின்று இன்னும்  சில  மான்களாவென்று  பார்க்கையில்  , பெரிய  புஷ்டியான  கோடுகள்  இல்லாத  அணிலொன்று  மரக்கிளையிலிருந்து   எங்களைப்  பார்த்து  வாலாட்டியது .
பேச்சை  நிறுத்தி  அவனையும்  புகைப்படம்  எடுத்துக்கொண்டு   நகர்ந்தோம் .

"உன்னைப்பார்த்து  17 வருடங்கள்  ஆகுது .நிறைய  பேச  வேண்டியிருக்கு .இப்போ  இருக்கிற  நிலைக்கு  வந்து  சேர்ந்த  கதையை  சொல்லு  , பேசிட்டே  போவோம்..." என்றேன் .

" நான்  ஒண்ணும்  பெரிய  ஆள்  இல்லைடா ...சும்மா  ஒட்டாத  என்ன ...."

" வேலைய  மட்டும்  கேக்கலை  , மொத்த  ஜெர்னிய  சொல்லு "...

" காலேஜ்ல  விளையாட்டா  இருந்துட்டேன் ....வேலைக்கு  போய்தான்  ப்ராக்டிக்கல்ஸ்  படிச்சேன்  நான் !...காலேஜ்  முடிஞ்சு  சென்னை  வந்து  நண்பர்களுடன்  சில மாசம்  வேல தேடினேன் ...எனக்கு  கம்ப்யூட்டர்  பத்தி  அவ்ளோவா   தெரியாது ....பிரெண்ட்ஸ்தான்  சொல்லிக்கொடுத்தாங்க ...ஆறு  மாசமா  வேலையில்லாம  போச்சு  மொத்தமா , அதுல  சென்னைக்கு  வந்து  முணு  மாசமாச்சு ..அப்புறம்  ஒரு  நாள்  , ஒரு  கம்ப்யூட்டர் கோச்சிங்  கிளாசில்  instructor  வேலை  கிடைச்சுது . ஒரு  மாசம்  போனதும்  , முதல் சம்பளம்  வாங்க  ஆசையா  இருந்தேன் . சரியாப்போகலை  பிசினஸ்  , சம்பளம்  கொடுக்க  முடியாதுன்னு  சொல்லிட்டான் .
அப்புறம்  இனி  பிரெண்ட்ஸ்க்கு   பாரமா  இருக்கக்கூடாதுன்னு  , ஊருக்கே  திரும்பிப் போய்ட்டேன் ...."

================== தொடரும்  பயணம் .

No comments:

Post a Comment