Gravity /புவியீர்ப்பு விதி.
வெகு சில இயக்குனர்கள், ஜெயமோகன் , எஸ் ரா ,சுஜாதா போன்றோரின் கதை சார்ந்து மற்றும் வசனத்துடன் படம் எடுக்கிறார்கள் அல்லது இலக்கிய ரசனை உள்ளவர்கள் என்றும் பெரும்பாலோர் மசாலா இயக்குனர்கள் என ஒரு பேச்சு உள்ளது
கமல் சார் கூட ஒரு மேடையில் இது பற்றி பேசினார். தமிழ் படங்களுக்கும் ,
இலக்கியத்திற்கும் பாலம் இன்னும் பலப்பட வேண்டும் என்ற கோணத்தில் இருந்தது அவர் பேச்சு.
இதனை நான் முழுவதுமாக ஏற்க முடியவில்லை!
இவர்களின் inspiration ! ஆங்கில, சீன படங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை.அதையும் தாண்டி சங்க இலக்கியம் வரை சென்று தான் வந்து இருக்கிறார்கள்.
ஒரு அம்பானது , பன்றி , மான் , புலி [ சரியான வரிசை மற்றும் விலங்குகளின் பெயர் நியாபகம் இல்லை!] இப்படி பல மிருகங்களை அடித்து தைத்து , முடிவாக ஒரு மரத்தின் மீது போய்
குத்தி நிப்பதாக ஒரு சங்க இலக்கிய பாடல் உண்டு. நம்ம பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்து இருப்போம்.தலைவனின் வீரத்தை பறை சாற்றும் பாடல் இது என புரிந்து இருக்கும். இயற்பியல் விதிக்கு அப்பாற்பட்டு உள்ளதே என்று யோசித்ததுண்டு. இருந்தாலும் அதன் அழகை ரசித்ததுண்டு, ஏனோ , ஒரு வேளை அவ்வளவு பலசாலியோ எனறு கூட ஒரு பக்கம் நம்பியதும் உணடு .
நிற்க.
நமது கதாநாயகர்கள் , அம்பே இல்லாமல் , வெறும் கையில்லே பல மனித மிருகங்களை புவிஈர்ப்பு சக்தியை மதிக்காமல் தூக்கி வீசுகிறார்களே.
இது சங்க இலக்கியத்தில் இருந்து தான் " inspire " ஆகி எடுக்கப்பட்டது என்று தான் நினைக்கிறேன் . இனிமேல் குறை கூற வேண்டாம் யாரும்!
நியூட்டன் தன்னுடைய இயற்பியல் விதியனை திருத்தி அமைப்பார் ஒரு தமிழ் படம் பார்த்தார் என்றால்.
பின்குறிப்பு : இந்த பறக்கும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகமாக ஆகிக்கொண்டே போகிறது . ஒரு அளவிற்கு மேல் என்னாலும் தாங்க முடியவில்லை!

No comments:
Post a Comment