Friday, June 3, 2016

ராசாளியே பாடல்

ராசாளியே பாடல் :
ரொம்ப நாட்களுக்கு பிறகு திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டிய  ரகுமான் அவர்களின் பாடல் ...இன்னும்  சொல்லப்போனால் ஜீவன்  நிரம்பி வழியும்  பாடல் .
 முழு வீச்சில் இறங்கி இசையமைத்து இருக்கிறார் போல ..
அல்லது கெளதம் மேனன் கூட்டமைப்பு செய்த மாயமாக கூட இருக்கலாம் .
பறக்கும் ராசாளியே .....என்னடா இது காதல் பாட்டிற்கு , அதுவும் பெண்ணை நோக்கி ராசாளி என்று இருக்கிறது என்று யோசிக்கையில் , கொஞ்சம் அடுத்து வந்த வரிகளும் , இசை வடிவமும் அப்படியே இழுத்துப்  போட்டு விட்டது .
"
முதலில் யார் சொல்வதன்பை ....
முதலில் யார்யெவதம்பை ...
"
இந்த இரண்டு வரிகள் பாடலில் சாராம்சத்தை சொல்லி விடுகிறது.
காதலில் அகப்படாமல் உயரப் பறந்து செல்லும் ராசாளிப் பறவையாக அவள் இருக்கிறாள் என அவ்வாறு அழைக்கிறான் தலைவன் எனக்கொள்ளலாம் .
உச்சம் தொட்டு விட்டது பாடல் என்று நினைக்கையில் ,
அங்கிருந்து அப்படியே வேறு சில பாடல்களின் சரணங்கள் தொடர்கிறது .
நின்னுக்கோரி , வடிவேலன் போன்ற பாடல்கள் வயலின் இசையோடு இழைந்து பிண்ணப்பட்டிருக்கிறது . இந்தச் சரணங்கள் அப்படியே பல்லவியில் போய் சேரும் இடம் மிக அருமை.
பாடலின் முடிவு , அப்படியே தாலாட்டி தூங்கவைத்து விடும் ...
"என் தோழில் குளிர் காய்கின்ற தீ ,,,,
குளிர் காய்கின்ற தீ ...."
தமிழோடு  அழகாக விளையாடிய தாமரைக்கு நன்றி கலந்த வணக்கம் ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

  1. நல்ல பாடல் குறித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல இசையை விரும்பும் உங்களுக்கு ஒரு சபாஷ்.

    தமிழில் இதுபோன்ற இலக்கிய வாசம் வீசும் பாடல்கள் வருவது ரஹ்மான் மூலமே சாத்தியப்பட்டது --- இடையில் ஏற்பட்ட ஒரு பெரிய சரிவுக்குப் பிறகு----

    தாமரையின் தங்கத் தமிழுக்கும், ரஹ்மானின் வசீகர இசைக்கும் இடையே நிகழும் போட்டி போலவே தோன்றுகிறது இந்தப் பாடலைக் கேட்கும்போது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காரிகன் அவர்களே ....
      தமிழுக்கு பல நிறம் உண்டுதானே ...இதுவும் ஒன்று !
      தாமரையின் வரிகள் தனித்துவம் வாய்ந்தது ..
      எல்லாம் சேர்ந்து ஒரு மாயஜாலம் நிகழ்ந்து இருக்கிறது , இந்தப் பாடலில் .

      கௌதம் மேனனை பாராட்ட வேண்டும் .
      குத்து பாட்டு போட்டு தாக்காமல் ,வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நல்ல இசையினை வெளிக் கொண்டுவந்தமைக்கு .

      you tube , இல் , இந்தப் பாடல் உருவான விதம் கண்டேன் .
      அது இதோ ,

      https://www.youtube.com/watch?v=aJy5VsPBdXI

      Delete